நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை சிலி, பெரு ஆகிய நாடுகளுக்கு அண்மையில் மேற்கொண்ட அருட்பணிச் சந்திப்போடு நிறைவு செய்துள்ளார். 2013ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதி, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்றுக்கொண்டார். அதன் பின் தனது முதல் அருட்பணிப் பயணமாக 2013ம் ஆண்டு ஆனி மாதம் 22ந் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை பிரேசில் நாட்டில் நடைபெற்ற 28வது உலக இளையோர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
கடந்த 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலையில் பெரு நாட்டின் தலைநகரான லீமா நகரத்தில் அமைந்துள்ள திருப்பீடத் தூதரகத்தில் அந்நாட்டின் அரேகியூப்பா, அயாகுக்கோ,குச்ற்கோ, காஸ்றோ அகிய நான்கு சிறைகளிலிருந்து சிறப்பு அனுமதியுடன் திருத்தந்தையிடம் வந்திருந்த பெண் கைதி ஒருவரையும், மூன்று ஆண் கைதிகளையும் சந்தித்துப் பேசினார்.
திருத்தந்தையின் அருட்பணிப் பயணங்கள்.
2013.
பிறேசில் ( 22-29.ஆடி 2013)
2014.
இஸ்றாயேல், ஜோர்தான், பலஸ்தினா (24-26.வைகாசி 2014)
தென் கொரியா (14-18 ஆவணி 2014)
அல்பானியா (21 புரட்டாதி 2014)
பிரான்ஸ் ( 25 கார்த்திகை 2014)
துருக்கி (28-30 கார்த்திகை 2014)
2015.
இலங்கை, பிலிப்பின்ஸ் ( 13-19 தை 2015)
பொஸ்னியா, கேர்சேகொவினா ( 6 ஆனி 2015)
பொலிவியா, ஈக்குவடோர், பிறாகுவே (5-13 ஆடி 2015)
கியூபா, அமெரிக்கா ( 19-27 புரட்டாசி 2015)
கென்யா, உகண்டா, மத்திய ஆபிரிக்க குடியரசு ( 25-30 கார்த்திகை 2015)
2016.
கியுபா, மெக்சிக்கோ ( 12-18 மாசி 2016)
கிறீஸ் (16 சித்திரை 2016)
ஆர்மீனியா (24-26 ஆனி 2016)
போலன்ட் ( 27-31 ஆடி 2016)
ஜேர்ஜியா, அசேர்பிஜான் ( 30 புரட்டாசி – 02 ஜப்பசி 2016)
சுவீடன் ( 31 ஜப்பசி – 01 கார்த்திகை 2016)
2017
எகிப்து (28-29 சித்திரை 2017)
போர்த்துக்கல் ( 12-13 வைகாசி 2017)
கொலம்பியா 06-10 புரட்டாசி 2017)
மியான்மார், பங்களாதேஸ் ( 27 கார்த்திகை – 02 மார்கழி 2017)
2018
சிலி, பெரு (15-21 தை 2018)