மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பொனாண்டோ ஆண்டகை அவர்கள், அனைத்தையும் அறிந்து கொள்ளுதல் என்னும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மறைமாவட்டத்தின் பங்குகள் பணி மையங்கள் ஆகியவற்றிற்குச் சென்று: பணி நிலைமைகளை அவதானித்து வருகின்றார்.இதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை ( 22.01.2018) மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணி மையத்திற்குச் சென்று இயக்குனர் அருட்பணி.சீ.ஜெயபாலன் அடிகளாருடனும், மறைமாவட்ட இளைஞர் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். தமது பணி மையத்திற்கு வருகை தந்த ஆயர் தந்தை அவர்களையும், மறைமாவடக் குரு முதல்வர்கள் அவர்களையும் இயக்குனரும், மற்றும் இளைஞர் பிரதிநிதிகளும் அன்போடும், பண்போடும், பண்பாட்டோடும் கூடிய வரவேற்பினை அளித்தனர்.