கிறிஸ்த ஒன்றிப்பு வாரம் தொடங்கியிருக்கும் இந்நாட்களில் மன்னார் ஆயர் இல்லத்தில் தங்களது மாதாந்த தியானத்திற்கு ஒன்று கூடிய மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் மத்தியில் தென்னிந்தியத் திருச்சபையின் கோப்பாய் பகுதி குருவானவர் அருட்திரு.பரிமளச் செல்வன் மற்றும் மன்னார் முருங்கன் வட்டாரங்களுக்கான மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக்குரு அருட்திரு. முருகுப்பிள்ளை ஆகியோர் கிறிஸ்தவ ஒன்றின் மூலம் செய்யக்கூடிய கிறிஸ்து விரும்பும் பணித்திட்டங்கள் பற்றி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கத்தோலிக்க திருச்சபையானது: மெதடிஸ்த திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை, தென்னிந்தியத் திருச்சபை,பப்ரிஸ்ற் திருச்சபை போன்ற பிரதான சபைகளுடன் நல்லுறைவை வளர்த்து வருகின்றது.