இன்று 20.01.2018 சனிக் கிழமை தங்கள் பாதுகாவ லராம் தூய செபஸ்தி யாரின் திரு விழாவை மன்னார் பேராலய மக்கள் கொண்டாடிய வேளையில் தங்கள் பங்குத் திருவிழாவிற்கு அழைத்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கு மகத்தான வரவேற்பளித்தனர். இன்று காலை மன்னார் வைத்தியசாலைச் சுற்றுவட்டத்தில் வைத்து ஆயர் அவர்களும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அவர்களும் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்குச் சமூகத்தால் வரவேற்கப்பட்டு பேராலயம் வரை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
மன்னார் தூய சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலை வாத்திய இசைக்குழுவும் மன்னார் தூய சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை வாத்தியக் குழுவும் இப் பவனியில் பங்கேற்று ஆயரின் வரவேற்ப்புக்கு மெருகூட்டினர்.
தூய செபஸ்தியார் பேராலயத்தை வந்தடைந்ததும் ஆயர் பண்பாட்டு முறைப்படி வரவேற்க்கப்பட்டார். ஆதனைத் தொடர்ந்து இன்றைய திருவிழாத் திருப்பலியை ஆயர் தலைமையேற்று நடாத்தினார். இன்றைய திருப்பலி மறையுரையை அ.ம.தி. மறையுரைஞர் வவுனியாப் பகுதிக்கான மேலாளர் அருட்பணி.அந்தோனிமுத்து வழங்கினார்.
முக்கிய பல்துறை சார் பணியாளர்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.