மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பாதுகாவலரின் திருவிழா நாளை 20.01.2018 சனிக்கிழமை கொண்டாடப்படவிருக்கின்றது. இதற்கு ஆயத்தமாக கடந்த ஒன்பது நாட்களாக ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இன்று 19.01.2018 வெள்ளிக்கிழமை மாலைப் புகழ் (வேஸ்பர்) வழிபாடு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை தலைமையில் நடைபெற்ற திருப்பலியினைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை வழிபாடு இடம்பெற்றது. ஆவ் வழிபாட்டினை அமல மரித் தியாகிகளின் வவுனியா மறையுரைஞர் குழுவிலிருந்து அருட்பணி. றமேஸ் அடிகளார் நடாத்தினார்.
வழிபாட்டின் முடிவில் நற்கருணை ஆண்டவர் ஆலய வளாகத்தைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனியாக எடுத்துவரப்பாட்டார். இவ்வழிபாட்டில் பல குருக்களும், அருடசகோதரர்களும், அருட்சகோதரி களும், பெருமளவிலான இறைமக்களும் பங்கேற்றுச் செபித்தனர்.பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரின் வழிகாட்டுதலில் அனைத்து வழிபாடுகளும் நடைபெற்றன.
































































































