மன்னார் மறைமாவட்டத் தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் இன்று 19-01.2018 வெள்ளிக்கிழமை காலை மன்னார் மடுமாதா சிறிய குருமடத்திற்கான முதலாவது சந்திப்பை மேற்கொண்டார். புதிய ஆயர் அவர்களை மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் ஆடிகளாரும், குருமட மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் வரவேற்றனர்.ஆயர் அவர்கள் இச்சந்திப்பின்போது சிறிய குருமட மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்து தங்களுடைய பிள்ளைகளின் உருவாக்கம் பற்றிக் கலந்துரையாடினார். ஆதன் பின் இடம்பெற்ற நிகழ்வில் கடநத வருடம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதல் நிலை மாணவனாகத் தெரிவாகிய இக் குருமடத்தில் இருந்து மன்னார் தூய சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில் கல்விகற்ற மாணவன் டெல்சியன் என்பவருக்கு மதிப்பளித்துப் பாராட்டும் நிகழ்வும் இடம் பெற்றது.