இன்று 18.01.2018 வியாழக்கிழமை மாலை உயிலங்குளம் தூய பேதுருவானவர் பங்கிலுள்ள ஆலய, பங்கு அருட்பணிப் பேரவை உறுப்பினர்,மறையாசிரியர், அன்பிய ஊக்குவிப்பாளர்கள், திருப்பாலர் சபை ஊக்குவிப்பாளர்கள், பல்வேறு பக்திச் சபைகளின் உறுப்பினர்கள், மன்னார் மறைமாவட்ட அருட்பணி இலக்குகளை தமது பங்கில் நடைமுறைப்படுத்து வதற்கான திட்டங்களை வகுப்பதற்காக உயிலங்குளம் தூய பேதுருவானவர் ஆலயத்தில் ஒன்றுகூடினர்.இவர்கள் பங்குத் திட்டங்களை வகுக்க உதவும் பொருட்டு ஊக்குவிப்பு உரைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திட்டமிடல் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. உயிலங்குளம் பங்குத் தந்தை அருட்பணி.ச.மரியதாஸ் லீயோன் அடிகளார் இதனை ஆக்கபூர்வமான முறையி;லே ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தினார்.