மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ர பிரஜைகளின்( முதியோர் சங்கம்) சங்கம் இன்று 17.01.2018 புதன் கிழமை காலை மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை தமது சங்கத்திற்கு அழைத்து சிறப்பான வரவேற்பை வழங்கியது.மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ர பிரஜைகளின்( முதியோர் சங்கம்) சங்க இயக்குனர் அருட்பணி.அல்பன் இராஜசிங்கம் அவர்களின் நெறிப்படுத்துதலோடு நடைபெற்ற இந்நிகழ்வில், இச் சங்கத்தின் பெருந்தொகையான உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு நிகழ்வுகள் அனைத்தும் மன்னார் தூய செபஸ்தியார் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றன.