மன்னார் மறைமாவட்ட 2018ம் ஆண்டிற்கான அருட்பணித் திட்டமிடல் முன்மொழிவுகளை பங்கு சூழ்நிலைக்கேற்பத் தமது பங்கில் செயற்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் பொருட்டு இன்று 16.01.2018 செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணிக்கு பள்ளிமுனை தூய லூசியாள் ஆலயப் பங்கின் அருட்பணிப் பேரவையினர், வழிபாட்டுக் குழவினர், பாடகர் குழாம், ஆண்கள், பெண்கள் மரியாயின் சேனையினர் தூய வின்சென் டீ போல் சபையினர், அன்பிய இணைப்பாளர்கள், மறையாசிரியர்கள், திருப்பாலர் சபை ஊக்குவிப்பாளர்கள், நலன் விரும்பிகள் என பல பணிக்குழுக்கள் தூய லூசியாள் ஆலயத்தில் ஒன்று கூடினர்.
தியாக்கோன் அருட்சகோத.பஸ்ரியனின் இறைவழிபாட்டைத் தொடர்ந்து பங்குத் தந்தை அருட்பணி செ.ஸ்ரிபன்றாஜ் அடிகளார் ஒன்று கூடலின் நோக்கம், நமது மறைமாவட்டத்தின் அருட்பணி இலக்கு ஆகியவற்றை தெளிவாக எடுத்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து திட்டங்களை வகுக்கும் பொருட்டு ஆலோசனை ஊக்குவிப்பு உரை வழங்கப்பட்டு, கலந்துரையாடலும் இடம் பெற்றது. பின்னர் திட்டங்களை இவ் ஒன்று கூடலில் கலந்து கொண்டோரிடம் தனித் தனியாக முன்வைக்குமாறு கேட்டக்கட்டதோடு இறுதியில் இறையாசீரோடு ஒன்று கூடல் நிறைவுக்கு வந்தது.