வங்காலை தூய ஆனாள் பங்கில் வரும் ஞாயிறு 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் இளம் பராயத்தினருக்கு உறுதிப் பூசுதல் அருட்சாதனம் வழங்கப்படவிருக்கின்றது. அதற்கு ஆயத்தமாக இன்று (15.01.2018) செவ்வாய்க்கிழமை மாலை உறுதிப்பூசுதல் பெறவிருக்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பாசறை நடாத்தப்பட்டது.அத்தோடு வரும் ஞாயிற்றுக்கிழமை 21.01.2018 அன்று மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகத்தால் வரவேற்பும், கௌரவிப்பும் இடம் பெறவுள்ளது.
அடுத்து பல ஆண்டு காலமாக வங்கால தூய ஆனாள் பங்கில் பணியாற்றிய யாழ் மாகாண திருக்குடும்ப அருட்சகோதரிகள் தமது பணியினை நிறுத்திவிட்டு சென்றுள்ள நிலையிலே, புதிதாக வங்காலைப் பங்கிற்கு லீயொன் தூய சூசையப்பர் சபை அருட்சகோதரிகள் வருகை தந்து பணியினை வழங்கவுள்ளனர். அவர்களது பணியும் அன்றைய புதிய ஆயரால் தொடங்கி வைக்கப்படுவதோடு அவர்களது இல்லமும் ஆயரால் ஆசீர்வதிக்கப்படும்.