வருங்கால அருட்பணியாளர்களை உருவாக்கும் பணி மையமான, மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் இன்று காலை பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தாம் சார்ந்திருக்கும் கலாச்சாரப் பண்பாட்டுக் கோலங்களை வழிபாட்டுடிலும், நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் பயன்படுத்தலாம் என்ற இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பெருந்தன்மை அறிவுறுத்தலை மனதிற்கொண்டு, இன்று நன்றியின் பொங்கல் பண்பாட்டுத் திருப்பலி மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனர் அருட்பணி.பா.கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளர் பண்பாட்டுத் திருப்பலியை நிறைவேற்றினார். சிறிய குருமட அதிபர் அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் அடிகளார் அனைத்து நிகழ்வுகளையும் சீராக நெறிப்படுத்தி ஒழுங்கமைத்து மாணவர்களை பயிற்றுவித்திருந்தார்.