நன்றி உணர்வினை வெளிப்படுத்தி மகிழும் பொங்கல் விழாவின் தமிழர் சமயப் பண்பாட்டு நிகழ்வுகள் இன்று தமிழர் வாழும் இடமெல்லாம் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும், மறைமாவட்டப் பணி மையங்களிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வளமும், நலமும், செழுமையும் தந்து வாழவைக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இதனை கத்தோலிக்க மக்கள் கொண்டாடி வருகின்றனர்.இன்று காலை மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு பணியகத்தில், மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி. சீ. ஜெயபாலன் அடிகளார் தலைமையில் ஞாயிறு திருப்பலியும் பெங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றன. மறைமாவட்ட இளைஞர்கள் பிரதிநிதிகளும்; இறைமாவட்ட இளைஞர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்களும், நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.