மன்னார் தூய பேராலயப் பாதுகாவலர் தூய செபஸ்தியான் திருவிழா தொடக்க வழிபாடுகள் இன்று மாலை ஆரம்பமாகியது .அமலமரித் தியாகிகள் சபையின் மறையுரைஞர் அருட்பணி அந்தோனிமுத்து அடிகளார் இன்றைய திருப்பலியை ஒப்புக்கொடுத்து இறைவார்த்தையை விளக்கியுரைத்தார்.
பெருந்தொகையான பேராலயப் பங்கு இறைமக்கள் இவ் வழிபாட்டில் இணைந்து செபித்தனர்.