மன்னார் தூய செபஸ்தியார் பேராலய இறைமக்கள் சமூகம் தங்களுக்கு இதுவரை பணியாற்றி தனது மறை மாவட்டம் திரும்பும் மற்றும் தொடர்ந்து பணியாற்ற வந்திருக் கின்ற தனது மேய்பர் களுக்கு நன்றி தெரிவித்தும், வரவேற்றும் மாபெரும் விழாவொன்றினை கடந்த ஞாயிற்றுக் கிழமை (07.01.2018) ஒழுங்கு படுத்தியிருந்தது.
காலையில் திருப்பலியின் முன்னதாக மறைமாவட்த்தின் திருத்தூதரக நிர்வாகியாகப் பணியாற்றிய பேருட்கலாநிதி ஜோசவ் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ஆகியோர் மாணவர்களின் மேலைநாட்டு வாத்திய இசையுடனும், தமிழ் பண்பாட்டுக் முறையோடு மாலை அணிவித்தும் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து திருப்பலியும் அதன் நிறைவில் ஆயர்களை மேன்மைப்படுத்தும் நன்றி , வரவேற்பு நிகழ்வுகள் இடம் பெற்றன. இத் திருப்பலியில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி ச.ஜொ.பெப்பி சோசை, மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அ.ஞானப்பிரகாசம், மன்னார் ஆயரின் செயலர் அருட்பணி.இ.நீக்லஸ், அருட்பணி.அல்பன் அ.ம.தி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலய உதவி பங்குத் தந்தை அருட்பணி.மரிய கிளைன், ஓய்வு நிலைபணியாளர் அருட்பணி. ஜோ.பெ.தேவறாஜா,தியாக்கோன் அருட்சகோதரர். ம.தேவறாஜன் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
அத்தோடு துறவிகள், பொது நிலையினர், அரச மற்றும் அரச சார்பற்ற பணியார்கள் எனப் பலர் கலந்து தங்களது விசுவாசத்தையும், ஒன்றிப்பையும்,உற்சாகத்தையும், நன்றியணர்வினையும் வெளிப்படுத்தினர்.