ஜனவரி; : 07 புனித ரெய்மண்ட் பென்யபோர்ட்

ஜனவரி; : 07
புனித ரெய்மண்ட் பென்யபோர்ட் (கி.பி.1175-1275)

இவர் ஸ்பெயின் நாட்டினர். ஆரகோன் நாட்டு மன்னனின் உறவினர். பல சிறப்புக்கள் பெற்ற “திருச்சபை சட்ட வல்லுனர்”. தொமினிக்கன் துறவற சபையில் 3-வது சபைத் தலைவர். சபையில் சேருமுன் 20 வயதிலேயே தத்துவக்கலைப் பேராசிரியராகப் பார்சலோனா பல்கழைக்கழகத்தில் திகழ்ந்தார். 47 வயதில்தான் துறவற சபையில் சேர்ந்தார். பேராசிரியராக வாழ்ந்த நாள்களில் தாம் தற்பெருமை கொண்டு வாழ்ந்ததற்கு பரிகாரமாக கடுமையான தவமுயற்சிகள் செய்ய கட்;டளை தருமாறு தம் பெரியவர்களிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். பல நூற்றாண்டுகளாக திருச்சபை சட்டங்கள் நூல்வடிவில் வராமல் அங்கொன்று இங்கொன்றாக இருந்தவற்றை ஒன்றாகச் சேர்த்து நூலாக வெளியிட பெரிதும் உதவினார். 1917-ம் ஆண்டுவரை பின்பற்றப்பட்ட திருச்சபை சட்ட நூலை 5 பகுதிகளாக எழுதிமுடித்தார்.

அறுபதாவது வயதில் தமது விருப்பத்திற்கு முற்றிலும் மாறாக டரகோளா நகரின் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார். நலிந்த உடல்நிலையைக் காரணம் காட்டி 2 ஆண்டுகளில் பேராயர் பதவியிலிருந்து விலகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் சபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தம் வாழ்வின் கடைசி 35 ஆண்டுகளில் மூர் இனத்தவர் மனம்திரும்பக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கென புனித தாமஸ் அக்வினாசை “யுபுயுஐNளுவு வுர்நு புநுNவுஐடுநுளு” என்ற நூல் எழுதத் தூண்டினார். 1256ம் ஆண்டு தமது சபைத்தலைவருக்கு எழுதிய மடல் ஒன்றில் 10,000 சரசேனியர்கள் திருமுழுக்குப் பெற்றதாக குறிப்பிடுகின்றார். இவர் சாவுப் படுக்கையில் இருந்த வேளையில் காஸ்டில் நாட்டு மன்னர் அல்போன்சும் ஆரகோன் நாட்டு மன்னர் ஜேம்சும் இவரைச் சந்தித்து இவரது கடைசி ஆசீர் பெற்றுச் சென்றனர். தமது 100வது வயதில் இதே நாளில் தமது தூய ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *