இன்று 06.01.2018 சனிக்கிழமை மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றியம் மன் மறைமாவட் டத்தின் புதிய ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ மற்றும், ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஓய்வுக்குப் பின்னர் இதுவரை மறைமாவட்டத்தின் திருத்தூதரக நிர்வாகியாகப் பணியாற்றிய பேருட்கலாநிதி ஜோசவ் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆகியோருடனான ஒன்று கூடல் மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத் தலைவர் சட்டத்தரணி திரு புனிதநாயகம் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றன. இந்நிகழ்வுக்கு மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச,அரச சார்பற்ற திணைக்கள முதன்மைத் தலைவர்களும், அருட்பணியாளர்களும், கத்தோலிக்க ஒன்றிய உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். இறுதியில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியச் செயலர் திரு.கெனடி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.