அருட்பணி மேரி பஸ்ரியனின் 33வது நினைவு நாள் இன்று வங்காலைப் பங்கில் திருப்பலியோடு ஆரம்பமாகி தொடர்ந்து அஞ்சலிக் கூட்டுத்தோடு நிறைவு பெறும்.
1985ம் ஆண்டு தை மாதம் 06ம் நாள் வங்காலை தூய ஆனாள் பங்குப் பணியாளராகச் சேவையாற்றிய அருட்பணி மேரிய பஸ்ரியன் அடிகளாரும், அவருடன் தங்கியிருந்த சிறுவர்களும், உதவியாளர்களும் பொது மக்களுமென 10 பேர் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து வந்த இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் இதே நாளில் வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகத்தால் நடாத்துப்பட்டு வருகின்றன.