இன்று ( 06.01.2018) தனது குருத்துவ அர்ப்பணத்தின் 45வது ஆண்டில் தடம் பதிக்கும் எமது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்களை வாழ்து;துகின்றோம். இறைவனின் பணிப் பயணம் நலமாகத் தொடரச் செபிக்கின்றோம்.
ஆயர் தந்தை அவர்கள் 1973ம் ஆண்டு மார்கழித் திங்கள் 06ம் நாள் மறைந்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் உரோம் வத்திக்கான் நகரில் அருட்பணியாளராகத் திருப் பொழிவு செய்யப்பட்டார்.