மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா 27/12/2017 புதன்கிழமை மாலை 06.30மணிக்கு பேராலயப் பங்கின் தூய இரண்டாம் யோண் பவுல் அரங்கில் பங்குத்தந்தை அருட்பணி. ச.ஜொ.பெப்பி சோசை அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்டத்திற் கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையும், மன்னார் பிரதேச செயலாளர் திரு. மரியதாசன் பரமதாஸ் அவர்களும், பங்குப்பணியாளர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அவர்களும் பங்கு மக்களால் மாலையிட்டு , ஆராத்தி வரவேற்கப்பட்டனர்.
மன்னார் தூய பேராலயப் பங்கின் கலை பண்பாட்டுப் பணிக்குவினர்அனைத்து பணிகளையும் நிறைவாக ஒழுங்குபடுத்தி , நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினர்.
விழாவின் தலைமையுரையினை மன்னார் தூய பேராலயப் பங்கின் கலை பண்பாட்டுப் பணிக்குவின் செயலர் திரு.ஜெயக்குமார் வழங்கினார். நன்றியுரை யினை தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் அருட்பணிப் பேரவைச் செயலர் திரு. சதீஸ் வழங்கினார். இந் நிகழ்வில் பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றன