மாசற்ற குழந்தைகள் விழா

டிசம்பர் 28

மாசற்ற குழந்தைகள் விழா

ஏரோது மன்னன் பெத்லேகமுக்கு அருகில் 2 வயதும் அதற்குட்பட்டதுமான ஆண் குழந்தைகளை வாளுக்கு இரையாக்கிய அரக்கச் செயலை இந்நாள் நினைவுகூர்கின்றது. இது மத்தேயு நற்செய்தியில் 2வது அதிகாரத்தில் கூறப்படுகிறது. இக்குழங்தைகள் மாசுமறுவற்றவர்கள். இவர்களே கிறிஸ்துவுக்காகச் செந்நீர் சிந்திய முதல் மறைசாட்சிகள். ஏன், அவருக்குப் பதிலாக இவர்கள் இறந்தார்கள். “வான் வீட்டில் அரும்புகள் மலர்ந்தன” என்கிறார் புனித அகுஸ்தின்.

“அன்னையர் அழுது புலம்புகின்றனர். குழந்தைகளைப் புதைக்கும் தந்தையர்கள் கதறுகின்றனர். ஏரோதுவே, நீயோ ஈகை இரக்கமற்றவனாகிவிட்டாய். குழந’தைகளின் பேரிரைச்சலைக் கேட்டும் கூட நீ பின்வாங்கவில்லையே! ஏன் இந்தப் பச்சிளங்குழந்தைகளைக் கொன்றாய் எனில் அச்சம் உன்னைக் கnhல்லுகிறது. வாழ்வின் ஊற்றையே அழிக்க முயன்றாய். வாழ்வின் ஊற்று குழந்தையாகத் தொழுவத்தில் கிடந்தாலும், அவர் உலகம்; கொள்ள இயலாதவர். நீ அறியாத முறையில் தமது திட்டத்தை நிறைவேற்றுகிறார். இக்குழந்தைகள் புரிந்துகொள்ளாவிடினும், கிறிஸ்துவுக்காக மாண்டனர்.

பேச இயலாத பச்சிளங்குழந்தைகளைக் குழந்தை இயேசு தமக்கேற்ற சாட்சினளாக ஆக்கிக் கொள்கிறார். விடுதலை அளிக்க வந்தவர், விடுவிக்கத் தொடங்கிவிட்டார். மீட்பர் மீட்பைத் தருகிறார். பேசத் தெரியாத குழந்தைகள், ஆனாலும் கிறிஸ்துவைப் பறைசாற்றுகின்றனர். “அரியணையில் வீற்றிருப்பவர் முன், அடிபணிந்து, என்றென்றும் வாழ்கின்ற அவரைத் தொழுகின்றனர்.” (திருவெளி 4, 10).

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *