கண்டி அம்பிட்டிய தேசிய குருமடம், யாழ்ப்பாணம் தூய பிரான்சிஸ் சவேரியார் பெரிய குருமடம், கழுத்துறை ஆயத்த மெய்யியல் குருமடம் அகியவற்றில் தங்களது குருத்துவக் கல்வியை மேற்கொள்ளும் மன்னார் மறைமாவட்ட பெரிய குருமட மாணவர்களின் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா ஒன்று கூடல் இன்று ( 26.12.2017) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டத்திற்கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை, மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி. அ.விக்ரர் சோசை, மறைமாவட்ட நிதியாளர் அருட்பணி.அ.இராஜநாயகம் ஆகியோரின் நெறிப்படுத்துதலோடு இவ் விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 22 பெரிய குருமட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களோடு பல அருட்பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.