கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் 24ந் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்றது. மன்னார் பேராலயப் பங்குப் பணியாளர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரின் வழிநடாத்துதலோடு மன்னார் மறைமாவட்டத்திற்கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டுத்திருப்பலியை மன்னார் பேராலயப் பங்குப் பணியாளர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை, உதவிப் பங்குப் பணியாளர் அருட்பணி. மரிய கிளைன் , ஓய்வு நிலை அருட்பணியாளர், அருட்பணி.ஜோ.பெ.தேவறாஜா, யேசுசபை அகதிகள் பணி நிறுவனத்தின் மியான்மார் நாட்டிற்கான இயக்குனர் அருட்பணி.வின்னி யோசப் ஆகியயோர் அணைந்து ஒப்புக் கொடுத்தனர். இவர்களோடு; தியாக்கோன் அருட்சகோ.ம.தேவறாஜனும் தன் பணியை ஆற்றினார்.
பெருந்தொகையான மக்கள் இத்திருப்பலியில் கலந்து இறையருள் பெற்றுச் சென்றனர். இந்தக் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி சிறப்பான ஆன்மிக ஆயத்தங்களோடு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.