சுவைத்துப் பாருங்கள் திருத்தந்தை நம் இதயத்திற்குத் தரும் இனிய சத்துணவு.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை  நாம்  மகிழ்ச்சியாகவும், இறைவனுக்கு விருப்பமான முறையில் கொண்டாட விரும்பினால், புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையின் வலுவற்ற எளிமையின் திருவுருவைத் தியானிப்போம். அங்கே இறைவன் இருக்கின்றார்”

“நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை அல்ல, மாறாக, நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்பதையே விண்ணகம் போற்றி மதிக்கும்”

இயேசுவின் பிறப்பு விழாவுக்கென உருவாக்கப்பட்டுள்ள குடில்கள், குழந்தை இயேசுவின் திரு உருவங்கள் இன்றி காத்திருப்பதையும், குழந்தை பிறப்புகளின்றி சில நாடுகள் உள்ளதையும் ஒப்பிட்டு, குழந்தைகளின்றி ஒரு நாடு வளர்வது என்பது ஆசீர்வாதமல்ல என்றும் குழந்தைப் பேறற்றவர்களாக நாம் வாழவேண்டும் என விரும்பும் சாத்தான், உடலளவிலும், ஆன்மீக அளவிலும், வாழ்வை வழங்குபவர்களாக நாம் வாழ்வதைத் தடைச் செய்கிறான் என்றும். நம்மில் தன்னலம் எனும் களைகளை வளர்த்து, நாம் கனி தராதவர்களாக வாழ்வதை விரும்பும் சாத்தான், நாம் பிறருக்காக வாழாமல் இருப்பதையே எதிர்பார்க்கிறான் என்றும்; , கிறிஸ்மஸ் குடில் தற்போது இயேசு பாலன் இன்றி வெறுமையாக இருந்தாலும், அது நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது, ஏனெனில், இயேசு உறுதியாக வருவார் என்பது நமக்குத் தெரியும், அதுபோல், தொட்டில் எனும் நம் இதயம், வாழ்வைப் பெறவும் வழங்கவும், தன்னைத் திறந்ததாக உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்; நம் திருத்தந்தை பிரான்சிஸ்,

நோயுற்ற குழந்தைகளால் அலங்கரிக்கப்பட் கிறிஸ்மஸ் மரம் பற்றிக் குறிப்பிடுகையில் கடினமானச் சூழல்களில் வாழ்ந்தாலும், தங்கள் கனவுகளையும், விருப்பங்களை யும் பொம்மைகளாக வடிவமைத்துள்ள குழந்தைகளை தான் சிறப்பாகப் பாராட்டுவதாகக் கூறிய திருத்தந்தை, உலகெங்கிலுமிருந்து வத்திக்கான் வளாகத்திற்கு வரும் பயணிகள் அனைவரும், இக்குழந்தைகளிடம் விளங்கும் நம்பிக்கையிலிருந்து பாடங்கள் பயில முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

இறைமகன் இவ்வுலகில் பிறந்ததைக் கண்முன் கொண்டுவரும் கிறிஸ்மஸ் குடிலும், மரமும், அடையாள மொழியில் நம்முடன் பேசுகின்றன என்றும் நேபிள்ஸ் பகுதியின் கலையை வெளிப்படுத்தும் குடில் உருவங்கள், இரக்கத்தின் பணிகளை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது, “பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7:12) என்று இயேசு கூறியதை நினைவுறுத்துகின்றன என்றும்.

மிகவும் கடினமான இதயங்கள் இளகிடவும், அயலவர் மீதுள்ள புறக்கணிப்புத் தடைகளை அகற்றவும், அடுத்தவர்க்கு தங்கள் இதயங்களைத் திறப்பதற்கு ஊக்கப்படுத்தவும், இலவசமாக நன்கொடைகள் வழங்கவும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நம்மைத் தூண்டுகின்றது, இதனாலேயே, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின்  அமைதி மற்றும் உடன்பிறப்பு உணர்வுள்ள செய்தியை, இக்காலத்திலும் வலியுறுத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது;, நம்மை வழிநடத்தும் உண்மையான உணர்வுகளால் இச் செய்தியை வெளிப்படுத்த வேண்டும் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் ; உண்மையான பொருளை, நாம் உணர்ந்துகொள்வதற்கு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இசை நிகழ்ச்சி உதவுகின்றது என்று கூறியத் திருத்தந்தை, பெத்லகேம் குடிலின் கனிவும், அமைதியும் நிறைந்த செய்தியை விதைப்பதற்கு, இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும்;. இக்காலத்தில் கனிவு என்ற சொல் பெரும்பாலும் மறக்கப்பட்டு, வன்முறை, போர் ஆகிய சொற்களே பேசப்படுகின்றன என்றும், பெத்லகேம் குடில் வெளிப்படுத்தும் கனிவு, அமைதி, வரவேற்பு ஆகியவற்றை நாம் விதைப்போம் என்றும் கூறியத் திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

“கிறிஸ்மஸ் விழாவை பிணைக்கைதியாக வைத்திருக்கும் உலகப் போக்கிலிருந்து அதனை விடுதலை செய்வோம்! இறைவனால் அன்பு கூரப்படுவதே, உண்மையான கிறிஸ்மஸ் விழாவின் அழகு” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *