மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் துறவியருக்கான கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா ஒன்றுகூடல் இன்று (16.12.2017) சனிக்கிழமை காலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. பெருந்தொகையான குருக்களும் துறவிகளும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயரினால் ஒழுங்கு செய்யப்படும் இந்நிகழ்வு குருக்கள் துறவியருக்கிடையிலான உறவை மென்மேலும் பலப்படுத்துவதாக அமைகின்றது. இன்றைய நிகழ்வுகள் அனைத்திற்கும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் தலைமை தாங்கினார்.
இரண்டு பகுதிகளாக நடைபெற்ற இந் நிகழ்வில் முதல் பகுதியில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் தியான வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேராலய கேட்போர் கூடத்தில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா கலைபண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. பல்வேறு குருக்கள், துறவிகளின் குழுமங்கள் சிறப்பான கலைபண்பாட்டு நிகழ்வுகளை கிறிஸ்து பிறப்பு இறையியல் சிந்தனைகளை மையப்படுத்தி உருவாக்கி வழங்கினார்கள். மன்னார் மறைமாவட்டத்தில் அண்மையில் தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்ட அருட்சகோதரர்கள் றஞ்சன், பஸ்ரியன், சதாஸ்கர்,தேவறாஜன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். இறுதியில் கிறிஸ்து பிறப்பு மகிழ்வுப் பரிசுகளுடனும், மதிய உணவுடனும் இனைத்தும் நிறைவு பெற்றன.