மன்னார் மறைமாவட்டத்தில், வருங்கால அருட்பணியாளர் களை தயார் செய்வதற்கான நாற்று மேடையாகத் திகழும் மன்னார் மடுமாதா சிறிய குருமட மாணவர்களின் கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டிய ஒளிவிழா 09.12.2017 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி. அ.ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விருந்தினர்களை வரவேற்ற பின் மாலைத் திருப்பலியோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இத்திருப்பலியை மன்னார் கல்வி, மறைக்கல்வி மற்றும் விவிலிய பணிக்குழுவின் இயக்குனர் அருட்பணி. பி.சே.றெஜினோல்ட் அவர்கள் நிறைவேற்றி மாணவர்களின் வளர்ச்சிக்கான இறைவார்த்தைச் செய்தியை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிறிய குருமடத்தின் கேட்போர் கூடத்திலே கிறிஸ்து பிறப்பையொட்டிய கலை பண்பாட்டு கலை பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு மன்னார் தூய சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் ( மணி) அவர்கள் மாணவர்களுக்கான கிறிஸ்து பிறப்பு ஒளிவிழாச் செய்தியை வழங்கினார். இங்கு முனஇனைநாள் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வரும், சிறிய குருமடத்தின் முன்னைநாள் இயக்குனருமான அருட்பணி. அ.சேவியர் குரூஸ் அடிகளாரும், பல அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும், முன்னைநாள் மாணவர்களும்,ஆசிரியர்களும், பெற்றோரும், நலன் விரும்பிகளும், உதவியாளர்களுமெனப் பலர் சமூகமளித்திருந்தனர்.
சுpறிய குருமடமாணவர்கள் தங்களது ஆற்றல்களைக் கொண்டு மிகவும் தாக்கமானதும், உணர்வுபூர்வமானதும், யதார்த்தமானதும், சமகால நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவதுமான கிறிஸ்தவ நல் விழுமியங்களோடு கூடியதுமான கலைப்படைப்புக்களை உருவாக்கி வெளிக் கொணர்ந்தனர்.