மன்னார் திருக்குடும்ப அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கிக் கல்விபயிலும் மாணவிகள் இன்று 09.12.2017 சனிக்கிழமை தமது விடுதியில் கிறிஸ்து பிறப்பையொட்டிய ஒளிவிழாவைக் கொண்டாடினர். தூய சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபரும் மாணவியர் விடுதியின் பொறுப்பாளருமான அருட்சகோதரி கில்டா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தின் மூத்தகுரு அருட்பணி.யோ.பெ.தேவறாஜா அடிகளாரும், மன்னார் திருக்குடும்ப அருட்சகோதரிகள் குழுமத்தின் தலைவி அருட்சகோதரி பற்றிசியா அவர்களும், தியாக்கோன் அருட்சகோதரர் மடுத்தின் தேவறாஜா அவர்களும், அருட்சகோதரிகளும், ஆசிரியர்களும், தங்கியிருந்து கல்விகற்கும் மாணவிகளின் பெற்றோரும் நலன் விரும்பிகளும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மாணவிகள் தங்களுடைய ஆற்றல்களின் ஆழுமையைச் சிறப்பான நுட்பங்களுடன் வெளிக் கொணர்ந்தது மிகவும் பாராட்டத் தக்கதாக அமைந்திருந்தது. இயேசுவின் பிறப்பு வரலாற்றை சமகால வாழ்க்கைப் புலங்களோடு இணைத்து அனைத்து கலைபண்பாட்டு நிகழ்வுகளையும் தயாரித்து வழங்கினர்.