மன்னார் தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலயத்தின் 2017ம் ஆண்டிற்கான ஒளிவிழா 05.12.2017 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்குத் திருப்பலியுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து ஒளிவிழா கலை பண்பாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இம் மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு.எஸ்.டனிஸ்ரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தேவன்பிட்டி பங்குத் தந்தை அருட்பணி.எஸ். அருட்குமரன் அடிகள், தேவன்பிட்டி ஆரம்பப் பாடசாலை அதிபர் திருமதி.பி.யூட்டஸ் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சலனஇ விரும்பிகள், பெற்றொர் எனப் பலர் குழுமியிருந்தனர். கிறிஸ்துவின் பிறப்பினையொட்டிய, மிகச் சிறப்பான, நல்ல அன்மிகச் சிந்தனைகளை வழங்கக் கூடிய நிகழ்ச்சிகளை ஆசிரியர்களும், மாணவர்களும் வழங்கியிருந்தனர்.