இந்தியா மதுரையை பணித்தள மையமாகக் கொண்டு, மன்னார் மறைமாவ ட்டத்தில் பணி புரியும் அமல உற்பவ மாதா துறவற சபை அருட்சகோதரிகள் தாங்கள் அமைக்கவிருக்கின்ற புதிய இல்லத்திற்கான நிலப்பரப்பிலே இன்று (03.12.2017) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பப் பணிகளைத் தொடக்கியுள்ளனர். மன்னார் நகரின் தென் முனையில் கடற்கரையோரமாக சவுத்பார் என்னுமிடத்தில் இருக்கின்ற நிலப்பரப்பிலேயே இவர்களுடைய பணி இல்லம் அமையவிருக்கின்றது.
இன்று மாலை இவ்விடத்திலே இடம்பெற்ற ஆரம்பப் பணி நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி கிங்கிலி சுவாம்பிள்ளை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, அமல உற்பவமாதா துறைவற சபைகளின் மன்னார் இல்லத் தலைவி அருட்சகோதரி சவிரி மற்றும் அருட் பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வேளையில் அன்னை மரியாவின் திருவுருவம் அபிஷேகம் செய்து அரியணை ஏற்றப்பட்டதோடு, மரக் கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.