மன்னார் திருக்குடும்ப அருட்சகோதரி களினால் முன்னெடுத்துச் செல்லப்படும் முன்பள்ளி சிறார்களின் ஒளிவிழா நிகழ்வு நேற்று 01.12.2017 வெள்ளிக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களை சிறுவர்கள் பேன்ட் வாத்திய இசையேடு அழைத்து வந்தனர்.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் பிரதேச செயலாளர் திரு மரியதாசன் பரமதாசன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் திருக்குடும்ப அருட்சகோதரிகளின் சபைத் தலைவி அருட்சகோதரி சிசிலியா அவர்களும், மன்னார் நகரசையின் நிர்வாக அலுவலர் செல்வி றெஜீனா சாந்தின கஸ்மீர் அவர்களும், மன்னார் தேசிய வங்கியின் அலுவலர் திருமதி. சியாமலி தேவநாதன் லெம்பேட் அவர்களும் வருகை தந்திருந்தார். சிறுவர்களின் நிகழ்வுகள் அனைத்தும் மிகமிக சிறப்பாக அமைந்தது இந்நிகழ்விற்கு பெரும் தொகையான பெற்றோர்கள் வருகை தந்திருந்தது மிகவும் சிறப்பான ஒரு அம்சமாகும்.
இந்த முன்பள்ளியின் பொறுப்பாளர் அருட்சகோதரி கிறிஸ்ரின் அவர்கள் ஏனைய ஆசிரியர்களோடு இணைந்து இம் முன்பள்ளிக் சிறார்களின் ஒளிவிழா நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாக நெறிப்படுத்தி முன்னெடுத்துச் சென்றார்.