அலெக்சாண்டிரியா நகர் புனித காத்ரின்

அலெக்சாண்டிரியா நகர் புனித காத்ரின்

தத்துவஞானி, மறைசாட்சி 4வது நூற்றாண்டு

ஒரு காலகட்டத்தில் இப்புனிதை மறைசாட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றவர். இருப்பினும் இவரைத் தத்துவ அறிஞர்களின் பட்டியலில் சேர்த்து, தத்துவ ஞான ஒளியில் சிறந்து விளங்கிய விசுவாசத்தின் பாதுகாவலியாகப் போற்றப்படுகிறார். இதனிமித்தம் கிறிஸ்தவ தத்துவ இயலார்களின் பாதுகாவலியாகவும் போற்றப்படுகின்றார்.

பாரம்பரிய அடிப்படையில் அலெக்சாண்டிரியா நகரில் உயர் குடும்பத்தில் தோன்றியவர் காத்ரின். சிறு வயது முதல் கற்றுக்கொள்வதில் தனி ஆர்வம் காட்டியவர். மரியன்னையின் காட்சி ஒன்றின் மூலம் மனம் மாற்றம் பெற்றவர். நகரில் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகக் கலகம் எழுந்த சமயம், காத்ரின் துணிந்த மனத்தடன் கொடுங்கோல் மன்னனை அணுகினார். தத்துவ ஞானத்துடன் இவர் எழுப்பிய வினாக்களுக்கு மன்னன் மறுமொழி கூற இயலவில்லை. எனவே தனது அரசில் இருந்த ஜம்பது தத்துவ அறிஞர்களை அழைத்தான். அவர்களாலும் காத்ரினது வினாக்களுக்கு விடை அளிக்க இயலவில்லை. வெற்றி காத்ரினுக்கே என்று கூறிவட்டு நழுவினர் அரசனைக் சார்ந்த அறிஞர்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அரசன் தனது அறிஞர்களை நெருப்புக்கு இரையாக்கி விட்டான். காத்ரினுக்கு மேலிருந்து தரப்பட்ட ஞானம், தேவ ஆவிக்குரியது என்பதை யாவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த அறிவைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அரசன், காத்ரினை மணந்துகொள்ளத் துடித்தான். கடும் எதிர்ப்புத் தெரிவித்ததன் பொருட்டு சிறையில் தள்ளப்பட்டார் காத்ரின். இந்தச் சூழலில் அரசனின் மனைவி ஃபாஸ்டினா என்பவருக்கே விசுவாச ஒளியைக் கொடுத்துவிட்டார் காத்ரின். அரசியுடன் அரச அவை மேலதிகாரி ஒருவரும் சிறையைக்காத்து வந்த அனைவரும் கிறிஸ்தவ ஒளிபெற வழிகாட்டியானார் காத்ரின்.

விளைவு, இரும்பு ஆணிகளுடன் கூடிய ஒரு சக்கரத்தில் சுற்றிக் கொல்லக் கட்டளை பிறந்தது. இவரைப் பிணைத்திருந்த கம்பிகள் திடிரென அறுந்துவிடவே, வேடிக்கை பார்க்க வந்தவர்களின் உயிரை வாங்கியது ஆணிகள் நிறைந்த சக்கரம்! இதனால் இன்னும் அதிகம் வெறிகொண்ட மன்னன், காத்ரினது தலையை வெட்ட ஆணையிட்டான். இவரது உயிர் பிரிந்த வேளையில், வான த}தர்கள் இவரது புனித உடலை சீனாய் மலைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தாக ஒரு வரலாறு நிலவுகிறது. அதன் அடிப்படையில் அங்கு இப்போது ஒரு ஆலயமும், இவரின் நினைவுச் சின்னமாக ஒரு துறவு மடமும் காட்சியளிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *