இலங்கை கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு இன்று மன்னார் மடுமாதா திருத்தலத்தில் எழுர்ச்சியோடு ஆரம்பமானது. இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்த சிங்களம் மற்றும் தமிழ் பேசுகின்ற இளைஞர் இளம் பெண்கள் பலர் மடுத்தாயாரின் திருச் சந்தியிலிருந்து மாபெரும் செபமாலை அடையாளத்தைக் கையிலேந்தியபடி மடுமாதா திருத்தலத்தில் அமைநதுள்ள தியான இல்லத்தை நோக்கி திருச் செபமாலை செபித்துக் கொண்டு பவனியாக வந்தனர்.
தியான இல்லத்திற்குச் செல்லும் பிரதான வீதியின் தொடக்கத்தில் வைத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்கபரிபாலகர் போருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அந்தனி விக்ரர் சோசை, இலக்கை கத்தொலிக்க இளைஞர்களுக்கான இயக்குனர் அருட்பணி மல்கம் பெனாண்டோ,மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி சந்தாம்பிள்ளை ஜெயபாலன் மற்றும் ஏனைய மறைமாவட்டங்களின் இயக்குனர்கள் மாலை அணிவித்தும், மாநாட்டுப் பிரதிநிதிகளான இளைஞர்கள் மலர் வழங்கியும் தமிழர் தம் பண்பாண்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் கோலாட்டம், குதிரையாட்டம் போன்றவற்றின் மூலமாகவும் மாநாட்டு மண்டபம்வரை அழைத்துவரப்பட்டனர். கத்தோலிக்க இளைஞர்களுக்குப் பொறுப்பான இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் வழிகாட்டுடியான யாழ் ஆயாஇ பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தில் சமூகமளிக்க முடியவில்லை.
அதன்பின் இன்றைய ஆரம்ப நிகழ்வுகளும், கலை பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. நாளை 25ம் திகதி சிறப்பு விழிப்புணர்வு வலுவூட்டல் நிகழ்வுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை வங்காலை தூய ன்னம்மாள் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்கபரிபாலகர் போருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் திருப்பலியும் இடம் பெறும் இடம்பெறும்.