திருச்சிலுவைச் சபை அருட் சகோ தரிகள் தமது ஆன்மிக, சமூகப் பணிகளின் பரப் பெல்லையை விசாலமாக்கிக் கொள்ளும் பணி நோக்கின் மற் றொரு வளர்ச்சிக் கட்டமாக வவுனியா வேப்பன்குளம் பங்கின் பணி எல்லைக் குள் அமைந்துள்ள உக்கிளான்குளம் என்னுமிடத்தில் புதிய இல்லமொன்றை அமைத்துள்ளனர். ஏற்கனவே உக்கிளான் குளம் என்னுமிடத்தில் இருந்துவந்த அருட்சகோதரிகளின்; இல்லம் போரின் வடுக்களைக் தாங்கி பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லாமையால் இப்புதிய இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
இப் புதிய இல்லம் 17.11.2017 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சிலுவை அருட்சகோதரிகளின் இலங்கைக்கான தலைவி அருட் சகோதரி கிளயா பஸ்தியாம்பிள்ளை பிரசன்னமாகியிருந்து அனைத்தையும் நெறிப்படுத்தினார். அத்தோடு வேப்பங்களம் பங்குப்பணியாளர் அருட்பணி லக்ஸ்ரன் டீ சில்வா அவர்களும், அமல மரித்தியாகிகள் அருட்பணியாளர்களின் வவுனியா இல்ல அருட்பணியாளர்களும், திருச்சிலுவை சபை அருட்சகோதரிகளும், ஏனைய துறவறசபைகளும், இறைமக்களும் கலந்து சிறப்பித்தனர்.