மன்னார் மறை மாவட்டத்தின் 2018ம் ஆண்டிற்கான திட்டமிடல் மாநாடு நேற்று 18.11.2017 சனிக்கிழமை மாலை ஆக்கபூர்வமான அருட்பணித் திட்டங்களோடு நிறைவுற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்கள் இறுதி நிகழ்வைத் தலைமையேற்று நெறிப்படுத்தினார்.
இவ்வேளையில் வவுனியா, முருங்கன், மன்னார் மறைக்கோட்டங்களின் முதல்வர்கள் அருட்பணி.இ.அகஸ்ரின் புஸ்;பறாஜா, அருட்பணி. ச.மாக்கஸ், அருட்பணி.ச.தேவறாஜா கொடுதோர் ஆகியோர் குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்களோடு இணைந்து தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் வாழ்வை யும்,பணியையும் மையப்படுத்திய, பொதுநிலையினரின் அழைப்பு, உருவாக்கம், பணி ஆகிய விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு திட்டங்கள் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டன. இந்நிகழ்வில் 250ற்கும் அதிகமான மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினரும், துறைசார் வல்லுனர்களும், அருட்பணியாளர்களும், மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களும், துறவிகளும் கலந்து சிறப்பான நடைமுறைச் செறிவான திட்ட ஆலோச னைகளை முன்வைத்தனர்.
இம் மாநாட்டு முடிவுகள் இறுதிநிலை வடிவம் பெற்று மறைமாவட்ட அப்போஸ்தலிக்க ஆழுனரின் ஒப்பதல் பெற்றபினர், மன்னார் மறைமாவட்ட அருட்பணித் திட்ட மிடல் குழுவின் செயலர் அருட்பணி. பி.சே.றெஜினோல்ட் அடிகளார் மூலமாக வெகுவிரைவில் பங்குகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்கள் தெரிவித்தார்.