மன்னார் மறைமாவட்டத்தின் 2018ம் ஆண்டிற்கான அருட்பணித் திட்டமிடல் மாநாடு இன்று 17.11.2017 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு இறைவழிபாட்டுடனும், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்கப் பரிபாலகருடைய ஆசியரையுடனும் ஆரம்பமானது.
மன்னார் திருச்சபையின் பல்வேறு நிலையிலுள்ளவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இன்றைய கருத்துரையாக பொதுநலையினரின் அழைப்பு என்னும் தலைப்பில் அருட்பணி.ச.கொ.தேவறாஜா அடிகளார் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பொது ஆய்வும் , குழு ஆய்வும் இடம் பெற்றது.
இன்றைய இறுதி நிகழ்வாக துறைசார் வல்லுனருடனான கலநதுரையாடல் இடம் பெற்றது. இக்கலந்துரை யாடலில் களனிப் பல்கலைக்களக விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.ஜே. யோகராசா, டலாசாய் குழந்தைகள் ஆங்கிலப் பள்ளியின் இயக்குனர் அருட்சகோதரர் மைக்கல், பிரபல சட்டத்தரணியும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க அமைப்பின் தலைவர் திரு.புனிதநாயகம், வவுனியாக் கல்வியிற் கல்லூரியின் ஓய்வுநிலை விரிவுரையாளர் திருவாளர் பேணாட், மன்னார் பிரதேச செயலர் திரு.பரமதாஸ், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி ஆகியயோர் கலந்து ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை வழங்கினார்கள். இந்நிகழ்வு நாளையும் தொடரும்.