ஜரோப்பிய மண்ணில் , புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்க் கத்தோலிக்க மக்களுக்கு ஆன்மிகப் பணியாற்றி வரும்ஆன்மிக இயக்குனர்களுக்கான மூன்றாவது தியானமும் ஒன்றுகூடலும் ஜேர்மன் நாடடின் எசன் நகரில் நடைபெற்று வருகின்றது. அங்கு நடைபெறும் தியானத்தின் சில பதிவுகள்.
இந்தத் தியானத்தை கிளறேசியன் சபையின் ஆசியப் பிராந்திய மேலாளர் அருட்பணி கலிஸ்ரஸ் ஜோசவ் அடிகளார் நெறிப்படுத்தி வருகின்றார். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சோந்த அருட்பணி கலிஸ்ரஸ் ஜோசவ் அடிகளார், ஜேர்மன் நாட்டில் உள்ள கிளறேசியன் மகாண இல்லத்தில் இருந்து பணியாற்றிவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.