மன்னார் மறைமாவட்டத்தின் 2018ம் ஆண்டிற்கான அருட்பணித்திட்டமிடல் மாநாடு நாளை 17ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகி மறுநாள் சனிக்கிழமை 18ந் திகதி மாலையில் நிறைவுக்கு வருகின்றது. தூய யோசேவ்வாஸ் அடிகளாரின் வாழ்வையும் பணியையும் எதிர்வரும் ஆண்டுகளிலே, நாம் நடக்கவேண்டிய ஆன்மிக வழித்தடங்களாக சிந்தித்துச் செயற்படும் மன்னார் மறைமாவட்டம்,
தூய யோசேவ் வாஸ் அடிகளார்: கிறிஸ்தவ விசுவாச வளர்ச்சிக்கு பொதுநிலையினரின் பங்களிப்பு அவசியம் என்பதை செயற்பாட்டில் காட்டியிருப்பதைக் கருத்திற் கொண்டு வருகின்ற ஆண்டில் பொதுநிலையினர் தம் அழைத்தலை சரியான முறையில் சிந்தித்துச் செயல்பட ஊக்குவிப்பதை கவனத்திற்கொண்டு கலந்தரையாடல்களை இவ் அமர்வுகளிலே முன்னெடுத்துச் செல்லவுள்ளது.
இம் மாநாட்டிலே மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி பரிபாலகர் பேரருட்திரு கிங்சிலி சுவாம்பிள்ளை, மன்னார் மறைமாவட்டுக் குருமுதல்வர் அருட்பணி அந்தனி விக்ரர் சோசை மன்றும் மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள், மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபைகளின் பிரதிநிதிகள் பங்குப் பிரதிநிதிகள் என் 200க்கும் அதிகமானவர்கள் பங்கேற்கின்றனர்.
இம் மாநாடு தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள மன்னார் மறைமாவட்டதின் பொதுநிலையினர்- குடும்பம் ஆகியவற்றிற்கான பணி மையத்தில் நடைபெறவுள்ளது.