இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (12.11.2017) பொன்தீவுகண்டல் தூய அந்தோனியார் ஆலயப் பங்கில் 22 இளம் வயதினருக்கு உறுதிப்பூசுதல் திருவருட்சாதனத்தை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்திரு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் வழங்கினார்.
பொன்தீவுகண்டல் பங்குப்பணியாளர் அருட்பணி.லோறன்ஸ் லீயோன் அடிகளார் மறையாசிரியர்களுடன் இணைந்து இவர்களுக்கான பயிற்சியை கடந்த பல மாதங்களாக வழங்கினார். இன்றைய நிகழ்வுக்கான அனைத்து ஒழுங்குகளையும் பங்குத்தந்தையோடு இணைந்து அருட்பணிப் பேரவையும், பங்குச் சமூகமும் ஒழுங்குபடுத்தியிருந்தது.