புனித மார்ட்டின்

புனித மார்ட்டின்

ரூர்ஸ் நகரின் ஆயர் – (கி.பி. 397)

இவர் பன்னோனியா நாட்டில் சபேரியா நகரில் பிறந்தவர். இவரின் பெற்றோர் கிறிஸ்துவின் அறியாதவர்கள். தந்தை படை அலுவலர் பணியின் பொருட்டு இத்தாலி யில் பாவியா நகருக்குக் குடும்பத்தினருடன் செல்ல வேண்டியதாயிற்று. 15 வயதில் மார்ட்டின் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டார். இன்னும் கிறிஸ்துவின் ஒளி பெறவில்லை. இருந்தாலும் ஒரு கிறிஸ்தவத் துறவி போல் வாழ்ந்து வந்தார். ஏமியன்ஸ் நகரில் இவர் வாழ்ந்த ஒரு நாள் கடுங்குளிர்காலத்தில் நகரின் நுழைவாயிலில் குளிரினால் நடுங்கி அரைநிர்வாணமாகப் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஏழை ஒருவரைச் சந்தித்தார். தமது போர்வையை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை அந்த ஏழையின் மீது போர்த்தினார். மறுபாதியைத் தமக்கு வைத்துக்கொண்டார். அதே நாள் இரவு இயேசு, மார்ட்டினுக்குத் தோன்றினார். “மார்ட்டின், இந்தப் போர்வையினால் என்னை நீ போர்த்தினாய்” என்ற சொற்களைக் அவர் கேட்க முடிந்தது.

இந்நிகழ்வுக்குப் பிறகு மார்ட்டின் திருமுழுக்குப் பெறுவதற்கு ஓட்டம் எடுத்தாராம். இவர் இன்னும் படையை விட்டு விலகவில்லை. இவருக்கு 22வயது ஆனபோது பிரான்சைச் சூறையாட அரக்கர் கூட்டம் வந்தது. மார்ட்டின் படையிலிருந்து விடுதலை அடைந்தார். பின்னர் புனித இலாரியர் ஆயராகப் பணியாற்றிய பாய்ட்டியர்ஸ் நகரை அடைந்தார். அவரின் சீடரானார்.

இச்சூழலில் மார்ட்டினுக்குத் தோன்றிய கனவில் அடிப்படையில் சொந்த ஊரான பன்னோனியா சென்று தம் தந்தை தவிர மற்ற அனைவருக்கும் திருமுழுக்கு அளித்தார். சென்ற இடத்தில் ஆரியப்பதிதரின் தப்பறையைக் கடுமையாகச் சுட்டிக் காட்டியதால், பிறகு புனித இலாரியர் தானமாக அளித்த ஓர் இடத்தில் தனிமையில் நாள்களைக் கழித்தார். விரைவில் தவ முனிவர் பலர் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டனர். கிபி. 1607 வரை இந்தத் துறவு மடம் பெரிதாகப் பெருகிக் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. 10 ஆண்டுகள் மார்ட்டின் இங்கு வாழ்ந்து, உடன் துறவிகளுக்கு ஆன்மீக வழிகாட்டியாக அமைந்ததோடு, அருகிலிருந்த இடங்களு க்குச் சென்று மறைபரப்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டார்.

மக்கள் இதுவரை ஆயராக்க முயன்றபோது, தட்டிக் கழித்து விட்டார். இதனால் வேறு ஒ ருவழியை மக்கள் மேற்கொண்டனர். “நோயாளி ஒருவரைச் சந்திக்க உடனே வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தனர். ஏற்கெனவே ஆலயத்தில் மார்ட்டினைத் திருநிலைப்படுத்த ஆயர்குழு காத்திருந்தது. அவரை மக்கள் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றபோது, இவரின் ஏழ்மையின் கோலத்தைப் பார்த்து, ஆயர்கள் திருநிலைப்படுத்த மறுத்தனர். பிறகு மக்களு டையவும் குருகுலத்தினருடையவும் கட்டாயத்தின் பேரிலும் ஆர்ப்பரிப்பின் பேரிலும் ஆயராகத் திருநிலைப் படுத்தினர். நாளடைவில் மார்மூட்டியேர் என்ற துறவு மட்த்தில் அவர் தங்கி வழக்கமான தமது பணியைத் தொடர்ந்தார். இங்கு இவருடன் 80 துறவிகள் சேர்ந்து விட்டனர். இவர்களில் பலர் பிரபு குலத்தவர். இங்கிருந்து கொண்டு அருகிலிருந்த கிளைப்பங்குகள் அத்தனையை யும் காலநடையாகச் சென்று சந்தித்து விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். உழைத்துக்களைத்துப் போயிருந்த சூழலில் கி.பி 397 நவம்பர் 8ல் இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறை மேல் பேராலயம் ஒன்று எழுப்பப்பட்டு இன்று வரை காட்சி அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *