இன்று 11.11.2017 சனிக்கிழமை காத்தான்குளம் பங்கில் உள்ள கத்தோலிக்க இளைஞர், இளம் பெண்களுக்காக தியானமும் ஒன்று கூடலும் மன்னார் மறைமாவட்டம் ஆட்காட்டிவெளிப் பங்கில் உள்ள இலங்கையில் உள்ள பல கத்தோலிக்க மக்களாலும் தரிசிக்கப்படும் திருத்தலமான பரிப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயத்தில் நடைபெற்றது.
காத்தான்குளம் பங்குத் தந்தை அருட்பணி அமல்றாஜ் குரூஸ் அடிகளாரால் இந் நிகழ்வு சிறப்பாக ஒழுங்கு செய்து வழிநடாத்தப்பட்டது. இப் பங்கிலுள்ள 54 கத்தோலிக்க இளைஞர், இளம் பெண்கள் இந் நிகழ்வில் கலந்து பயனடைந்தனர்.
இவர்களுக்கான தியானம் மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களான றஜனிகாந் அடிகளார், நியூட்டன் அடிகளார் ஆகியோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஆட்காளிவெளி பங்குப் பணியாளர் அருட்பணி டெஸ்மன் அஞ்சலோ அடிகளாரும் பிரசன்னமாகியிருந் தார்.இந் நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலி க்க இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி. ச.ஜெயபாலன் அடிகளார் வருகை தந்து மறைமாவட்ட இளைஞர் பணி முன்னெடுப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களை முன்வைத்தார்.