கடந்த மாத நடுப்பகுதி யில் வவுனியா வேப்பங் குளம் பங்கின் எல்லைக் குள் அமையும் உக்கிளான் குளம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டிருந்த, பல ஆண்டுகள் வரலாற் றைக் கொண்ட தூய அன்னை வேளாங் கன்னியின் திருவுவம் இனந் தெரியாதோரல் சேதமாக்கப்பட்டிருந்தது.
அதனை மீளவும் நலன் விரும்பிகளும், இறைமக்களும், பங்கு அருட்பணியாளரும் ஒன்றிணைந்து மிகவும் அழகாக் கட்டி முடித்திருந்தனர்.
அந்தத் தூய அன்னை வேளாங்கன்னியின் திருவுருவம் அதே இடத்தில் இன்றைய தினம் (09.11.2017) மீளவும் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வேப்பங்குளம் பங்கு அருட்பணியாளர், லக்ஸ்ரன் டீ சில்வா அவர்களின் தiலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத் திருநிகழ்வில் பலர் கலந்து இறையருள் பெற்றச் சென்றனர்.