மன்னார் மறைமாவட்டத் தின் 2018ம் ஆண்டிற்கான அருட்பணித் திட்டமிடல் மாநாடு இம்மாதம் 17ந் திகதி வெள்ளி மாலை தொடக்கம் 18ந் திகதி சனிக்கிழமை மாலை வரை மன்னார் தாழ்வு பாடு வீதியில் அமைந்துள்ள தூய யோசேவ்வாஸ் குடும்பப் பணி மையத்தில் நடைபெறும்.
இவ் அருட்பணித்திட்டமிடலுக்கான கலந்துரையாடல் கருப்பொருளாக தூய யோசேவ்வாஸ் அடிகாளாரின் வாழ்வையும் பணியையும் அடியொற்றியதாக பொதுநிலையினரின் அழைப்பும் பணிகளும் என்னும் தலைப்பு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (06.11.2017) காலை ஆயர் இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களின் செனற் சபையில் இவை அனைத்தும் கலந்துரையாடப்பட்டு இறுதி வடிவம் பெற்றுள்ளன.
மேலும் மன்னார் மறைமாவட்ட அருட்பணித் திட்டமி டல் பணிக்குழவின் செயலர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் றெஜினோல்ட் அடிகளார் மேற்படி மாநாடு பற்றி பங்குப் பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்: இம்மாநாட்டில் கலந்து அடுத்த ஆண்டிற்கான அருட் பணியைத் திட்டமிடுவதற்காக ஆக்கபூர்வமான ஆலோ சனைகளை வழங்க பங்குகளிலிருந்து மறைமாவட்டத் தால் வரையறைசெய்யப்பட்டுள்ள தொகையிலான பிதிநிதிகளை அனுப்பிவைக்குமாறும், இப் பிரதிநிதிகள் முழுமையாகப் பங்குபற்றி பொதுநிலையினரின் உருவாக்கத்திற்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை யும், ஆலோசனைகளையும், வழங்கக் கூடியவர்களாக இருக்கக்க வேண்டு மென்பதில் கூடிய கவனம் செலுத்து மாறும் பங்கு அருட்பணியாளர்கள் கேட்கப்பட்டுள்ளார் கள்.
இதனையொட்டிய அனைத்து ஒழுங்குகளும் சிறப்பாக அருட்பணித் திட்டமிடல் பணிக்குழவின் செயலர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் றெஜினோல்ட் அடிகளா ரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.