இன்று 06ந் திகதி (06.11.2017) திங்கட் கிழமை எமது மறைமாவட்டத் திற்கான இணைய தளமான www.arudkadal.com மன்னார் மறைமா வட்ட அப்போஸ்த லிக்க பரிபாலகர் பேரருட்திரு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் சம்பிரதாயபூர்வமாக இயக்கிவைக்கப்பட்டது.இன்றைய தினம் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்ற இறந்துபோன ஆயர்கள், குருக்கள், துறவிகளுக்கான திருப்பலி 17.00 மணிக்கு அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்திரு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதற்கு மறமாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல இறைமக்களும், துறவிகளும், குருக்களும் வருகை தந்திருந்தனர். திருப்பலி முடிவில் இவ் இணையதளம் ஆயரின் ஆசீரோடு இயக்கிவைக்கப்பட்டது.
Dear father Dalima
It is good for all of us. We can receive many messages. thanks for having created. We appreciate you.
Fr.Roshan