இளைஞர் ஒன்றிய மாதாந்த ஒன்றுகூடல்
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியப் பங்குப் பிரதிநிதிகளுக்கான மாதாந்த ஒன்றுகூடல் 04.11.2017 சனிக்கிழமை மாலை தொடக்கம் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அடம்பன் பங்கின் நெடுங்கண்டல் தூய அந்தோனியார் ஆலயத்தில் இடம் பெற்றது. ஆன்மிகத்திலும், சமூக வளர்ச்சியிலுமான திருவழிபாடும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
அத்தோடு எதிர்காலத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. இதற்கான அனைத்து ஒழுங்குகளையும் மன்னார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி சீமான்பிள்ளை ஜெயபாலன் அடிகளார் மேற்கொண்டிருந்தார். இந் நிகழ்விற்கு அடம்பன் பங்குத் தந்தை அருட்பணி நியூட்டன் அடிகளாரும் மற்றும் நெடுங்கண்டல் பகுதியில் பணிபுரியும் இயேசுசபைக் குருக்களும், கார்மேல் சபை அருடசகோதரிகளும் துணையாக இருந்த செயற்பட்டனர்.