தூய யோசேவ் வாஸ் ஆண்டை சிறப்புக்கும் நோக்குடன் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் திருச்சபை வளர்ச்சிக்குழுவும், கலைபண்பாட்டுக் குழுவும் இணைந்து பங்குத் தந்தை அருட்பணி ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரின் வழிகாட்டுதலின் கீழ் தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் வாழ்வும் பணியும் பற்றிய கண்காட்சியொன்றினை 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி தொடக்கம் மாலை 07.00 மணிவரை தூய செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் திருவழிபாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
மிகவும் சிறப்பானதாகவும் சிறந்த ஆறிவூட்டல் பின்புலத்தைக் கொண்டதாகவும், அனைவரும் பயனடையக்கூடிய விதத்திலும் இக்கண்காட்சி அமைந்திருந்தது.
பங்கின் இறைமக்கள் அனைவரும் இப்பணித் திட்டத்தில் உற்சாகத்தோடும், முழுமையாகவும் பங்கேற்றதை அவதானிக்க முடிந்தது. பெருந்தொகை யான மக்கள் இக்கண் காட்சியை கண்டு நிறைவடைந் ததோடு, தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் வாழ்வை யும், பணியையும் நன்கு தெரிந்து கொண்டனர். பேராலயத்தின் உதவிப் பங்குத் தந்தை அருட்பணி மரிய கிளைன் அடிகளார் அனைத்தையும் ஒருங் கிணைத்து முன்நடாத்தினார்.