அருள்பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள் விடுதலை

டந்த 18 மாத ங்களாக இஸ் லாம் தீவிர வாதிகளால் கடத்திவைக் கப்பட்டிருந்த, இந்திய அருள் பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், தான் விடுதலை செய்யப்பட்ட மறுநாளே, வத்திக்கானில்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து ஆசீர் பெற்றார்.

இப்புதன் பொதுமறைக்கல்வியுரையை நிறைவு செய்து, வத்திக்கானில் தான் தங்கியிருக்கின்ற சாந்தா மார்த்தா இல்லம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வில்லத்தில் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களைச் சந்தித்தார்.

இச்சந்திப்பில் திருத்தந்தையின் காலடிகளை முத்த மிட்ட அருள்பணி டாம் அவர்கள், தான் பிணையல் கைதியாக இருந்த காலம் முழுவதும், தான் எதிர் கொண்ட துன்பங்களை, திருத்தந்தை மற்றும் திரு அவையின் நலனுக்காக அர்ப்பணித்ததாக, திருத் தந்தையிடம் தெரிவித்தார். திருத்தந்தையும், அருள் பணி டாம் அவர்களின் நெற்றியில் சிலுவை வரை ந்து ஆசீரளித்தார்.

அருள்பணி டாம் அவர்கள் விடுதலையடைந்துள்ள தையொட்டி, இந்தியத் திருஅவையும், நன்றித் திருப் பலிகளை நிறைவேற்றின. 

2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ஏமன் நாட்டின் ஏடனில், புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணி யாளர் சபையின் முதியோர் இல்லத்திலிருந்து கடத்த ப்பட்ட சலேசிய சபை அருள்பணி டாம் அவர்கள், செப்டம்பர் 12, இச்செவ்வாயன்று விடுதலை செய்யப் பட்டார். இவர் ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து உரோம் திரும்பினார்.

இவ்விடுதலை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஓமன் நாட்டு Ona செய்தி நிறுவனம், வத்திக்கானின் வேண்டுகோள் மற்றும், ஓமன் நாட்டு சுல்தான் Qabus அவர்களின் வழிகாட்டுதல்களின்படி, மஸ்கட்டிலு ள்ள அதிகாரிகள், ஏமன் நாட்டினர் சிலரின் ஒத்து ழைப்புடன், அருள்பணி டாம் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவர் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கு உதவினர் என்று அறிவித்துள்ளது.

57 வயது நிரம்பிய, கேரளாவைச் சேர்ந்த, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், ஏமனில் மறைப்பணியாற்றி வந்தார். இவர் மறைப் பணியாற்றிய பங்கு ஆலயம், குண்டுவீச்சால் சேத மடைந்ததையொட்டி, ஏடனில், அன்னை தெரேசா வின் பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் முதி யோர் இல்லத்தில் தங்கி மறைப்பணியாற்றி வந் தார்.  இஸ்லாம் தீவிரவாதிகள், 2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, அந்த முதியோர் இல்லத்தைத் தாக்கியதில் அன்னை தெரேசா சபையின் நான்கு அருள்சகோதரி கள் மற்றும் 12 பேர் கொல்லப்பட்டனர். அச்சமயம் இவரும் கடத்தப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *