விவிலியப் போட்டிகள்

திருவிவிலிய அறிவு போட்டி பற்றிய அறிமுகம்;;;;
2020

மேன்மைத் தங்கிய அருட்பணியாளர்களே, அருட்சகோதர சகோதரிகளே, மறையாசிரியர்களே, மாணவர்களே,

கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சும் தேசிய மறைக்கல்வி நடு நிலையமும் இணைந்து மறைமாவட்ட மறைக்கல்வி நிலையங்களுடாக வருடந்தோறும் நடாத்தும் தேசிய மறைப்பாடசாலை திருவிவிலிய அறிவு போட்டி இவ் வருடமும் நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி கூறுகின்றோம்.

இம் முறை போட்டிகள் இரு பிரிவுகளாக நடாத்தப்படும்.
1. திருவிவிலிய அறிவு போட்டி
2. திருவிவிலிய கட்டுரை போட்டி

ஒரு மாணவர் இவ்விரு போட்டிகளிலும் பபங்குபற்றலாம்

இது போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதன் பிரதான நோக்கம் போட்டிக்கு மேலதிகமாக, மாணவர்கள் திருவிவிலியத்தை கற்பதன் மூலம் அவர்களின் ஆன்மீக வாழ்வை வளர்த்தல் ஆகும்.

ஊடகம் – தமிழ், சிங்களம், ஆங்கிலம்
போட்டிச் சுற்றுக்கள் – பங்கு, மறைக்கோட்டம் தேசிய ரீதியாக
மறைமாவட்ட போட்டிக்கான விபரங்களுடன் விண்ணப்பப் படிவமும்; தேசிய போட்டிக்கான விபரங்களுடன் விண்ணப்பப்படிவமும் இத்துடன் தரப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பப்படிவம்

1. பங்கு ரீதியாக போட்டி 2020 ஆவணி மாதம் மாதம் 16ம் திகதி நடாத்தப்பட்டு மறைமாவட்ட மறைக்கல்வி நிலையங்கள் அவற்றை ஆவணி மாதம் 25ம் திகதிக்கு முன்னர் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
2. மறைக்கோட்ட போட்டிகள் 2020 ஜப்பசி மாதம் 01ம் திகதி நடைறுவவதோடு அதில் 70 இற்கும் மேலான புள்ளிகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைகளத்திற்கு மறைமாவட்ட இயக்குனர்களினால் அனுப்பி வைக்க வேண்டும்.

2020 ஜப்பசி மாதம் 30ம் திகதி தேசிய ரீதியான போட்டிகள் நடைபெறும்.
அனுசரணை – கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைகளம்

திருவிவிலிய அறிவு எழுத்து போட்டிக்கான விதி முறைகள்

1.எழுத்து போட்டி 2 மணித்தியாலங்கள் நடைபெறும். இத்துடன் தரப்படடுள்ள பாடத்திற்கேற்ப வினாக்கள் தயாரிக்கப்படும்.
2.எழுத்து பரீட்சையின் போது கதைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. கதைப்போர் பரீட்சையிலிருந்;து நீக்கப்படுவர்.
3.தமது போட்டி எண் (இலக்கத்தை) விண்ணப்பதாரி வேறு யாருக்கும் சொல்லக் கூடாது.
4.தொலைபேசி பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்லப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
5.மறைமாவட்ட ர்Pதியில் வருகை தரும் விண்ணப்பதாரி தனது மறைமாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி தனித்தனியாக எழுத்து பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.
6.மறைக்கோட்ட ரீதியில் 70 இற்கும் அதிகமாக புள்ளி பெறும் அனைத்து பிள்ளைகளுக்கும் விசேட சான்றிதழ் வழங்கப்படும்.
7.இப் போட்டிக்காக நீங்கள் பயன்படுத்த வேண்டிய திருவிவிலியம்; பொதுமொழி பெயர்ப்பு 2000ம் ஆண்டிற்கு பிந்திய பதிப்பு ஆகும்.
8.போட்டியாளர் மறைப்பாடசாலை சீருடையுடன் வருகை தர வேண்டும்.
9.ஒருவர் ஒரு குழுவை மட்டுமே பிரதித்துவப்படுத்தலாம்.
10.அனைத்து போட்டிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் யு4 அளவிலான தாளில் எழுதி நிரப்பப்பட வேண்டும்.
11.அந்த விண்ணப்பப்படிவம் மறைமாவட்ட போட்டிக்காக மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்திற்கும் தேசிய போட்டிக்காக மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் மூலம கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைகளத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

திருவிவிலிய அறிவு போட்டியை அறிமுகப்படுத்துதல்
1.இம்முறை திருவிவிலிய அறிவு போட்டிகள் எழுத்து போட்டியாக நடைபெறும்.
2.பங்கு ரீதியாக போட்டி. பங்கில் மறைக்கல்விக்குப் பொறுப்பான அருட்தந்தையினால் ஒழுங்கு செய்யப்படும்.
3. பங்கு ரீதியாக எழுத்து போட்டிகளை நடாத்தி, கூடிய புள்ளிகளைப் பெற்ற பிள்ளைகள் 10பேர் மறைக்கோட்ட போட்டிக்கு அனுப்பப்படுவர்.
4.பங்கு ரீதியாக 10பேரைத் தெரிவு செய்யும் போது 95இற்கு மேலான புள்ளிகள் பெற்ற போட்டியாளர்கள் இருப்பின் அவர்களை மறைக்கோட்ட போட்டிக்கு அனுப்பலாம். அத்தோடு அவர்களின் விடைத்தாள்களைத் தேசிய மறைக்கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5. மறைக்கோட்ட ரீதியான போட்டியில் 70இற்கு மேலான புள்ளிகளைப் பெற்ற பிள்ளைகள் மறைவாட்ட ரீதியில் தேசிய போட்டிக்காக தெரிவு செய்யப்hடுவார்.
6.ஒரு மறைமாவட்டத்தில் தேசிய போட்டிக்காக தகுதி பெறும் போட்டியாளரின் எண்ணிக்கைக்கேற்ப தேசிய போட்டி நடைபெறும் நிலையங்களின் எண்ணிக்கை மறைக்கல்வி நிலைய இயக்குனர்களாலும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைகளத்தினாலும் இணைந்து தீர்மானிக்கப்படும்.
7.இம்முறை தேசிய ரீதியில் 1.2,3ம் நிலைகள் தெரிவு செய்யப்பட மாட்டாது. மறைக்கோட்ட ரீதியில் 70 இற்கும் மேலான புள்ளிகளைப் பெறும் எல்லா போட்டியாளர்களுக்கும் அவர்கள் பெற்ற புள்ளிகளுக்றே;ப நற்சான்றிதழ்கள் வழங்கப்படும்.
8. பரிசளிப்பு கொண்டாட்டமும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் போதிய இட அளவுக்கேற்ப ஒரு மறைவாட்டத்தின் கொண்டாட்டத்திற்காக பிரதிநிதித்துவப்படுத்துவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.