புனித மாட்டின் தெபோரஸ்

புனித மாட்டின் தெபோரஸ்

துறவி – (கி.பி. 1579 – 1629)

கி.பி 1579 ஆம் ஆண்டு பெரு மாநிலத்தில் லீமா நகரில் இவர் பிறந்தார். இவரின் தந்தை ஸ்பெயின் நாட்டில் உயர் குலத்தைச் சார்ந்தவர். தாய் நீக்ரோ வகுப்பினர். வைப் பாட்டியின் மகன் என்ற காரணத்தால், இவருக்குத் திரு முழுக்கு பதிவேட்டில் இவரின் தந்தை பெயர் “தெரியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளவயதிலேயே நோயா ளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது இவரது வழக்கம். தொமினிக்கன் சபையில் சேர்ந்த பின்னர் இந்த அனுபவம் ஏழைகளுக்கு உதவுவதற்குப் பெரிதும் துணையாக இருந் தது. இவர் கடுமையான தவமுயற்சிகளில் ஈடுபட்டார். திவ்விய நற்கருணை மீது அளவு கடந்த பக்தி கொண்டி ருந்தார். நாளடைவில் இவரின் தந்தை இவரைத் தம் மகனாக ஏற்றுக்கொண்டார்.

துறவற சபையில் வார்;த்தைப்பாடு கொடுக்கத் தமக்குத் தகுதி இல்லை என்று 9 ஆண்டுகள் வரை சொல்லி வந் தார். பின்னர் சபைச் சகோதரர்கள் வலியுறுத்திப் புரிந்து கொள்ள வைத்தனர். இவர் 50 ஆண்டு வரை வாழ்ந்தார். செபம், தவம், நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் தொண்டு, மறைக்கல்வி கற்றுக்கொடுத்தல் இவை அனைத்திலும் அக்கறைகாட்டினார். புனித லீமா ரோசுக்கு உற்ற நண்பராகத் திகழ்ந்தார். நோயாளிகளைத் தொட்டுக் குணப்படுத்தத் “தனிப்பெரும் சரம்” பெற்றிருந்தார். வில ங்குகளையும் மிகவும் அன்பு செய்தார்.

“தம் முன்மாதிரிகையாலும், நன்மை புரிவதாலும் இனிய சொற்களாலும் மக்களை இறைவன்பால் கவர்ந்த இந்தப் புனிதர், இக்காலத்திலும் மக்களை இறைவனிடம் செலுத் தும் ஆற்றல் உள்ளவராக இருக்கின்றார். ஆனால் அந்தோ, எல்லோருமே இந்தப் புனிதமான செயல்களைப் பற்றிப் புரிந்துகொள்வதாகக் கூறிவிட முடியாது. உறுதி யாக இன்று எத்தனையோ பேர் உலக ஆசைகளாகிய வலையில் சிக்கியிருக்கின்றார்கள். இதனால் அறச் செயல்கள் பற்றி அக்கறையின்றி வாழ்கிறார்கள் அல்லது அவற்றை உதறிவிடுகிறார்கள். இன்னும் கூற வேண்டு மானால், இந்தப் புண்ணியபாதையே இல்லாதது போல் நடந்து கொள்கிறார்கள். மார்ட்டின் தந்த பாடம் பலரையும் மனம் திருப்புவதாக!” – மார்ட்டினுக்குப் புனிதர் பட்டம் அளித்தபோது திருத்தந்தை 23-ஆம் அருளப்பர் விடுத்த செய்தி.