இறந்த விசுவாசிகள் நினைவு நாள்
திருத்தந்தை 23ம் அருளப்பர் குறிப்பிடுவதுபோல் இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு, நிலையான மறை யுண்மைகளைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. மறைந்து விடக் கூடியன எவை என்றும், நிலை பெற்றிருக்கக் கூடி யன எவை என்றும், நம்மைச் சீர்தூக்கிப் பார்க்கவைக் கிறது. கி.பி. 3-வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, தெர்தெல்லியன் கூறியுள்ளதுபோல், ஒருவர் இறந்த நாளான்றும், அதன் பிறகு ஆண்டு நிறைவு நாளான்றும், அவருக்காகத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கி.பி. 7-வது நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில், இறந்த விசு வாசிகளின் நினைவு தூய ஆவியாரின் திருநாளுக்கு மறுநாள் கொண்டாடப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது. அது கி.பி 11-ஆம் நூற்றாண்டில் நவம்பர் 2-ஆம் நாளாக மாறியது. குளுனியைச் சேர்ந்த மடாதிபர் புனித ஒடில்லோவின் கருத்துப்படி குளுனி துறவற சபையின்; எல்லா மடங்களிலும், அனைத்துப் புனிதர்களின் விihவுக்கு அடுத்த நாளில் இறந்த விசுவாசிகள் நினைவு கூரப்படுகின்றனர்.
புனித பெர்நார்து தனது சகோதரர் சற்றயீரஸ் இறந்த சமயம் நிகழ்த்திய மறையுரையிலிருந்து: சாவு ஆதாயம். வாழ்வு ஓர் தண்டனை. புனித பவுல் அடிகளார் கூறவில் லையா. “எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்து, சாவு ஆதாயம்.” கிறிஸ்து எனக்கு ஆதாயம் என்பது எதைக் குறிக்கிறது? உடலின் சாவையும், அருள்வாழ்வையும் அல்லவா? எனவே அவருடன் இறந்து அவருடன் அருள் வாழ்வு வாழ அழைப்புப் பெற்றுள்ளோம். இதற்காக நாம் தினமும் மரிப்பதற்குக் கற்றுக்கொள்வது அவசியம். இதன் மூலம் கீழ்த்தரமான உடல் இச்சைகளை வெட்டி யெறியமுடியும். விண்ணகத்தின் உச்சியிலிருந்து படைப்பை உற்றுநோக்குவதின் மூலம், அவற்றின் கவர்ச்சியை நாம் வெகு தொலைவில் போட்டு ஒதுக்கி விடுகின்றோம். இவ்வாறுதான் நாம் மரணஇருளிலிருந் தும் அதன் தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ள இயலும். உடல் இச்சையின் போராட்டத்தை நம் உள் மனதில் உணருகிறோம். இதற்கு என்ன மாற்று மருந்து? இத்தகைய சாவினின்று என்னை மீட்கவல்லவர் யார்? இறைஇயேசுவின் மூலம் இறையருளால் மீட்புப் பெறுவோம்.
எனவே சாவு கிறிஸ்துவின் அருங்கொடை. ஓர் அற்புத மான மருந்து. உடலின் சாவு என்பது மனித இயல்பு. இதன் பொருட்டு நமது உடலின் இச்சைகளிலிருந்து நம்மை அகதிகளாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது கிறிஸ்து வின் பிரிந்து அகதிகளாக மாட்டோம். உடலின் இச்சை களுக்கு நம்பிக்கையளிக்காமல் இயற்கையின் பசிக்கு அவசியமான உணவு அளித்தாலும், அருளவாழ்வைப் பெரிதெனப் பேணி வாழவேண்டும்.
கிறிஸ்து விரும்பியிராவிடில் அவர் இறந்திருக்க வேண்டிய அவசியமில்லை, தனது கேவலமான சாவைப் புறக்கணிக்க அவர் விரும்பவில்லை. நம்மை மீட்பதற்கு தனது சாவைத் தவிர வேறு வழியைத் தேடிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலின் அவரின் சாவு ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாக அமைந்துள்ளது. அவரது சாவினால் நாம் முத்திரையிடப் பெற்றிருக்கின்றோம். அவரது சாவைத் திருப்பலி வேளையில் அறிக்கையிடு கின்றோம். அவரது சாவு நமது வெற்றிவாகை, அருட் சாதனம். ஆண்டுதோறும் உலகின் மாபெரும் விழா அவரது சாவை நினைவுகூர்தல். இவ்வாறு அவரது சாவு நமது சாவை மீட்டுவிட்டது. இதனால் நாம் சாவைக்குறி த்து துயர் அடையலாமா? மனுமகன் சாவினின்று ஓடி விடவில்லை. நாம் சாவுக்குப் பயந்து பறந்துவிடலாமா? மனுமகன் பறந்துவிடவில்லையே.
உண்மையாகவே, இறைவன் படைப்பின் தொடக்கத்தில் சாவை உண்டுபண்ணவில்லை. ஆனால் என்றைக்கு அரு வருப்புக்குரிய பாவம் மனிதனில் புகுந்து அதன் பொரு ட்டு, கண்ணீரும், இரத்த வியர்வையும் அவனுடன் ஒட்டிக்கொண்டதோ அன்று தான் சாவை ஓர் மாற்று மருந்தாகத் தோற்றுவித்தார். இவ்வுலகில் நாம் அனுபவி க்கும் ஆயாசங்களுக்கு ஓர் முற்றுப்புள்ளிதேவை. இவ்வாறு தான் மன்னன் தாவீது பாடி இருக்கிறார். “ஆண்டவரிடம் நான் கேட்டவரம் ஒன்று. எனது வாழ் நாளெல்லாம் அவரது இல்லத்தில் இடம்பெற்று வாழ வேண்டும். அங்கு எனது ஆண்டவரின் அழகு Nhபனத்தைக் கண்டுகளிக்க வேண்டும்.