இரண்டாம் வத்திக்கான் சங்கம்

அணிந்துரை

இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட ஏடுகளின் ஒரு புதிய தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சங்கம் நிறைவுற்ற இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே கல்லூரியில் (தூய பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி) வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு பரவுவதற்கும் அதன் வழியாக ஒரு மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும் இக்கல்லூரி துணை செய்துள்ளது.

1987 இல் வெளியிடப்பட்ட மூன்றாம் பதிப்பில் நிறைவுரைகள் என்ற ஒரு பகுதி சேர்க்கப்பட்டிருந்தது. சங்கப் போதனைகளைச் செயல்படுத்துவது குறித்துத் திருச்சபை ஆசிரியம் வெளியிட்ட முக்கியமான ஏடுகளின் கருத்துத் தொகுப்பு அப்பகுதியில் தரப்பட்டது. சங்கத்தின் போதனைகளை அகில உலகத்திருச்சபை எவ்வாறு ஏற்றுக்கொண்டது சங்கத்தால் விளைந்த நன்மைகள் யாவை, சங்கப் போதனைகள் இன்னும் அதிகமாக மக்களிடையே எடுத்துச் செல்வது எவ்வாறு போன்ற பல பொருள்கள் பற்றிய ஆயர் மன்றச் சிறப்பு அமர்வு 1985 இல் நிகழ்ந்தது. அப்போது வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை என்ற பகுதி முந்திய பதிப்பில் இணைக்கப்பட்டிருந்தது போல புதிய பதிப்பிலும் தரப்படுவது சிறப்பு. திருச்சபைவாழ்வுக்கான ஊற்றுகள் இறைவார்த்தை மற்றும் திருவழிபாடு என இந்த ஏடு குறிப்பிடுகின்றது. திருச்சபை அன்பிலும் ஒற்றுமையிலும் கூட்டப்பட்ட ஒரு மக்கள் சமூகமாக விளங்க வெண்டும். புளிப்பு மாவுபோல இருந்து செயல்பட்டு நாம் வாழுகின்ற உலகை உருமாற்றிப் புதுப்பித்திட வேண்டும் என நின்று வலியுறுத்திக் கூறுகின்றது.

இப்போது வெளியாகின்ற புதிய பதிப்பில் நிறைவுரைகள் தரப்படவில்லை. எனினும், சங்கம் முடிவடைந்த 1965 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வெளியாகியுள்ள திருச்சபை ஆசிரிய ஏடுகளின் கருத்துச் சுருக்கத்தைச் சங்க ஏடுகளுக்குத் துணை நூலாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்புதிய பதிப்பில் திருவிவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பு (1995) பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பாகும். கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து உருவாக்கிய விவிலியத்தமிழ் மொழிபெயர்ப்பு கிறிஸ்தவ ஒன்றிப்புக்குச் சிறந்த அடையாளமாகவும் கருவியாகவும் அமைந்ததுபோல, அந்த மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துகின்ற சங்க ஏடுகளின் புதிய பதிப்பும் எல்லாக் கிறிஸ்தவ மக்களிடையேயும் ஒத்துழைப்பையும் உருவாக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

வத்திக்கான் சங்கப்போதனைகள் மக்களிடையே பரப்புவதற்கு அரிய முயற்சிகள் பலவற்றைத் தொடர்ந்து செய்துவருகின்ற தூய பவுல்; இறையியல் கல்லூரிக்குப் பாராட்டுகள்!

தமிழகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகில் இறையாட்சி பற்றிய நற்செய்தி சங்க ஏடுகள் வழியாக ஊக்கத்துடன் ஒலித்திட இறையருளை இறைஞ்சுகிறேன்.

ம. ஆரோக்கியசாமி
மதுரை பேராயர்
பேராயர் இல்லம்,
மதுரை.

திருத்திய நான்காம் பதிப்பின் முன்னுரை(2001)

‘மூன்றாம் ஆயிரமாண்டு வரும் வேளையிலே’ என்னும் தலைப்பில் திருத்தந்தை 2 ஆம் யோவான் பவுல் 1994 இல் வெளியிட்ட சுற்றுமடலில் திருச்சபையின் வாழ்வுக்கு 2ஆம் வத்திக்கான் சங்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கியுள்ளார். கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் நிறைவுற்று, மனித இனம் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வாகிய 2ஆம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962-1965) கொணர்ந்த மறுமலர்ச்சியை மீண்டும் புதிய முறையில் உள்வாங்கி அதற்கு வெளிவுருவம் கொடுக்க வேண்டும் என்று திருத்தந்தை தம்சுற்றுமடலில் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

2ஆம் வத்திக்கான் சங்கம் வழங்கிய போதனைகளையும் சங்கம் கொணர்ந்த மறுமலர்ச்சியையும் மக்கள் அனைவரும் உள்ளார்ந்த விதத்தில் ஏற்று திருச்சபையிலும் சமூகத்திலும் இறையாட்சி மதிப்பீடுகளை ஆழமாக நிலைநிறுத்துகின்ற செயல் ஒரு தொடர் நிகழ்வு. சங்க மறுமலர்ச்சி தமிழகக் கத்தோலிக்கர் எல்லாரிடையும் எல்லாமட்டத்திலும் நிறைவாக நிகழ்ந்துள்ளது எனக் கூறவியலாது. இதற்கு ஒரு காரணம் சங்க ஏடுகளில் தமிழாக்கம் எப்போதும் எளிதில் கிடைக்காததும் ஆகும். 1987 இல்வெளியாகிய திருத்தி விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பு மிக விரைவில் தீர்ந்துபோயிற்று. அதே சமயத்தில் கிறிஸ்தவ சபைகள் ஒன்று சேர்ந்து எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் ஏற்புடைய ஒரு புதிய விவிலிய தமிழாக்கத்தை வெளிக் கொணர்வதில் தீவிரமாக ஈடுபடடிருந்தன விவிலியத்தின் பொது மொழிபெயர்;ப்பு 1995 நவம்பர் மாதத்தில் வெளியாயிற்று. இ;ம்மொழியர்ப்பில் இயல்பான தரமான எளிய தமிழ் மொழிநடை இடம்பெற்றுள்ளது. தெளிபொருள் மொழிபெயர்ப்பு முறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. சொற்கள் அனைத்தும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. மரியாதைப் பன்மை வழங்கப்பட்டது. இருபாலாருக்கும் பொருந்தும் வழக்குமுறை பயன்படுத்தப்பட்டு இருபால் சமத்துவ நோக்கு துலங்குகிறது.

பொது விவிலியத்தில் துலங்குகின்ற பண்புகளைச் சங்க ஏடுகளின் புதிய பதிப்பிலும் கையாண்டுள்ளோம். விவிலியப் பகுதிகள் நேரடியாக மேற்கோள் காட்டப்படும் இடங்களிலும் மறைமுகமாகப ;பயன்படுத்தப்படும் இடங்களிலும் புதிய விவிலிய மொழிபெயர்ப்பே பயன்படுத்தப்படுகிறது. விவிலியத்தில் வழங்கப்படும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற புதிய சொற்களும் இந்த அடிப்படையிலே மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அப்போஸ்தலர் என்று பழைய விவிலிய மொழிபெயர்ப்பில் வழங்கப்பட்ட சொல் புதியவிவிலிய மொழிபெயர்ப்பில் திருத்தூதர் என்றாகிறது. அதிலிருந்து அப்போஸ்தலத்துவம் திருத்தூதப்பணி எனவும் மாற்றம் பெறுகின்றன. புதிய விவிலிய மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இராயப்பர், சின்னப்பர் என்னும் பெயர்கள் முறையே பேதுரு, பவுல் என்றாகின்றன.

திருத்திய நான்காம் பதிப்பிற்கான பணி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் துவங்கியது. சங்கம் வெளியிட்ட 16 ஏடுகளையும் மறுபார்வையிட்டு புதிய விவிலிய மொழிபெயர்ப்பின் அடிப்படையில் திருத்தி அமைகின்ற பணி வௌ;வேறு இறையியல் வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வோர் ஏட்டின் ”உட்புகுமுன்” என்னும் பகுதி புதிதாக எழுதப்பட்டுள்ளது. சென்ற பதிப்பில் தரப்பட்ட நிறைவுரைகள் என்னும்பகுதி இப்புதிய பதிப்பில் விடப்பட்டுள்ளது சங்கம் நிறைவுற்ற காலத்திலிருந்து இன்றுவரை வெளியாகி உள்ள திருச்சபை ஆசிரிய ஏடுகளின் கருத்துச் சுருக்கத்தை ஒரு தனி ஏடாக வெளியிடல் நலம் என்று ஆசிரியர் குழு தெரிவித்த கருத்து ஏற்க்கப்பட்டுள்ளது.

முந்திய பதிப்பில் தரப்பட்டதுபோல, இந்தப் பதிப்பிலும் நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட அகரவரிசைப் பொருளடைவு உள்ளது. சங்க ஏடுகளில் வருகின்ற கருத்துகளை எளிதாகக் கண்டு கொள்வதற்கும் ஒரு பகுதியை பிற பகுதிகளோடு ஒப்பிட்டுப்பார்ப்பதற்கும் இந்தப் பொருளடைவு உறுதுணையாக இருக்கும் எனநம்புகிறோம்.

முந்திய பதிப்பில் தரப்பட்டதுபோல, இந்தப் பதிப்பிலும் நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட அகரவரிசைப் பொருளடைவு உள்ளது. சங்க ஏடுகளில் வருகின்ற கருத்துகளை எளிதாகக் கண்டு கொள்வதற்கும் ஒரு பகுதியை பிற பகுதிகளோடு ஒப்பிட்டுப்பார்;ப்பதற்கும் இந்தப்பொருளடைவு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.

1985 இல் ஆயர் மன்றம் வெளியிட்ட இறுதி அறிக்கை இந்தப் பதிப்பிலும் இணைக்கப் பட்டுள்ளது.

புதிய மொழிபெர்ப்புப் பணியைச் செய்தவர்கள்

இப்பதிப்பில் வெளியாகின்ற 16 ஏடுகளையும் மறுபார்வையிட்டுத் திருத்திய அறிஞர்களின் பெயர்ப்பட்டியல் கீழே தரப்படுகிறது.

ஏடு மொழிபெர்ப்பு
1. திருவழிபாடு பணி.சோ.பிரிட்டோ சே.ச
2. சமூகத் தொடர்புக் கருவிகள் பணி.அமுதன்
3. திருச்சபை பணி.ஆரோக்கியதாசு சே.ச
4. கத்தோலிக்கக் கீழைச் சபைகள் பணி. சே. சேசுராசு
5. கிறிஸ்தவ ஒன்றிப்பு பணி. தே. அல்போன்சு
6. திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி பணி ஒய். இருதயராசு
7. துறவற வாழ்வைப் புதுப்பித்தல் பணி.ஆர்.சே.இராசா சே.ச
8. திருப்பணிப் பயி;;ற்சி பணி. ச.தே. செல்வராசு
9. கிறிஸ்தவக் கல்வி பணி. எஸ். சேசுதாசன்
10. கிறிஸ்தவமல்லாச் சமயங்ளோடு
திருச்சபைக்குள்ள உறவு
பணி.சேவியர் இருதயராசு சே.ச
11. இறை வெளிப்பாடு பணி.கு.எரோணிமுசு
12. பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி பணி.ஞா.இஞ்ஞாசி சே.ச
13. சமயச் சுதந்திரம் ஆயர். பா.அந்தோணி
14. திருச்சபையின் நற்செய்திப்பணி பணி.எ.யோசப் செபாஸ்டின்
15. திருப்ணியாளர்களின் பணியும் வாழ்வும் பணி.எ.சான் குழந்தை
16. இன்றைய உலகில் திருச்சபை பணி. வ. பவுல் லியோன்

மனமுவந்து பணியாற்றிய இவர்கள் அனைவரையும் உளமாற பாராட்டுகிறோம்.

நன்றி

சங்க ஏடுகளின் நான்காம் பதிப்பு வெளிவரத் துணைபுரிந்தவர்கள் பலர்;. இப்பதிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தி, எங்களுக்கு ஊக்கமூட்டியதோடு, அழகான அணிந்துரை நல்கிய மதுரைப் பேராயரும் தூய பவுல் இறையியல் கல்லூரி ஆயர் குழுத்தலைவருமாகிய மேதகு மரியானுசு ஆரோக்கியசாமி அவர்களுக்கும் எம் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சங்கம் நிறைவுற்ற நாளிலிருந்தே சங்கப் போதனைகளை மக்களுக்கு அறிவிக்கின்ற சீரிய பணியில் ஈடுபட்ட தூய பவுல் இறையியல்கல்லூரி, இந்த பதிப்பையும் வெளியிடுகின்றது. எங்கள் கல்லூரியில் பணியாற்றுகின்ற, பணியாற்றிய அனைத்துப் பேராசிரியர்களுக்கும் சிறப்பாக இந்நான்காம் பதிப்புப் பணி தொடங்கிய காலத்தில் கல்லூரித் தலைவராக இருந்து ஊக்கம் ஊட்டிய பணி.எ.சான்குழந்தை அவர்களுக்கும் இப்பணியில் தொடங்கிய காலத்திலிருந்தே முழு மூச்சுடன் ஈடுபட்டவரும் இன்றைய கல்லூரித் தலைவருமான பணி செ.சூசை மாணிக்கம் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகின்றோம்.

சங்க ஏடுகளைக் குறைந்த விலையில் கொடுப்பதற்கு உதவி புரிந்த ஜெர்மன் நாட்டு மீசியோ நிறுவனத்திற்கும் எம் நன்றி.

இப்பதிப்பை தயாரிப்பதிலும் அச்சிடுவதிலும் அருகிருந்து உதவி நல்கிய துணைப் பதிப்பாசிரியர் பணி.லூ.அந்துவான், (திருச்சி) அவர்களுக்கும் அனைத்து ஏடுகளையும் வாசித்து அச்சுப் பிழைத்திருத்தங்களையும் ஏனைய திருத்தங்களையும் செய்ய உதவிய பணி.செ.பிரான்சீசு சேவியர் (கோட்டாறு) அவர்களுக்கும் அச்சுப்பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு உதவிய சகோதரர்கள் அ.அமலதாசு தென்சிங், ச.சவரிமுத்து சத்தியநாதன், ம.அமலநாதன் ஆகியோருக்கும் எம் உளமார்ந்த நன்றி.

அழகுற அச்சுக் கோர்த்த திருச்சி, புரோமோபோர்ஸ் அட்வர்;டைசிங் பிரைவேட் லிட்., நிறுவனத்தாருக்கும் நூலை நல்லமுறையில் அச்சேற்றி வெளியிட்ட சிவகாசி ஆன்றோ ஆர்ட் கிராஃப்ட்ஸ் நிறுவனத்தாருக்கும் எம் உளங்கனிந்த நன்றி.

புலர்ந்துவிட்ட புதிய நூற்றாண்டில் தமிழகத் திருச்சபை இறையாட்சியின் பணியாளாக ஊக்கமுடன் செயல்பட 2 ஆம் வத்திக்கான் சங்க ஏடுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு துணையாக வேண்டும் என வாழ்த்துகின்றோம்.
தூய பவுல் இறையியல் கல்லூரி பணி.வ.பவுல் லியோன்
திருச்சிராப்பள்ளி பணி.கு.எரோணிமுசு
சனவரி 1, 2001 பதிப்பாசிரியர்கள்

மூன்றாம் பதிப்பின் முன்னுரை (1987)

திருச்சபை வரலாற்றில் ஒருதிருப்புமுனை

வளர்ந்து வரும் எந்த ஒரு சமுதாயமும் தன்வரலாற்றுப் பயணத்தில் எண்ணிறந்த நிகழ்ச்சிகளைச் சந்தித்தே ஆகவேண்டும். இந்நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவே வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் என்று பெருமையுடன் அழைக்கப்பெறும் தன்மையடைத்தன. இவையும் இவற்றின் விளைவுகளும் முன் கூட்டியே வரையறுக்கப்பட்ட கோடுகளின் எல்லைகளுக்குள் நின்றுவிடுவதில்லை. மாறாக, சமுதாயத்தின் சிந்தனையையும் நடைமுறைகளையும் பழைய போக்கிலிருந்து புதியதொரு பாதையில் தடம் திருப்பிவிடும் சக்தி வாய்ந்தவை. இலட்சியப் பயணத்தின்போது களைப்பாலும் தளர்ச்சியாலும் குறிக்கோள் தெளிவின்மையாலும் துவண்டு விழுந்துவிடாமல், நம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் தொடர்ந்து ஏறுநடை போட இயக்காற்றல் தருவனவும் மேற்கூறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் தாம் பொதுவாகப் பார்க்குமிடத்து, இந்நிகழ்ச்சிகள் சமுதாய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைகின்றன. பழையனவற்றில் நலமானற்றைத் தேர்ந்து கொண்டு, சுமையாகவும் தடையாகவும் அமைந்தவற்றைத் தயங்காது பின்விட்டு விட்டு, முன்நோக்கிய பார்வையோடு முகடு நோக்கி முனைந்து ஏறிச் செல்ல இந்நிகழ்ச்சிகள் உந்துசக்திகள் ஆகின்றன.

கிறிஸ்துவை வெளிப்படையாக ஏற்று அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றிவாழ முனைகின்ற மக்களாலாகிய இயக்கமெனும் திருச்சபைச் சமுதாயத்திலும் பற்பல வரலாற்று முக்கியமான நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. நாம் வாழும் இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் மிக மையமான பெரு நிகழ்ச்சியாக அமைந்தது இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் (1962-1965). திருச்சபைக்குப் புத்துணர்ச்சி வழங்கி, புதியதொரு சிந்தனையை அளித்து, ஆழமான பொருள்நிறைந்த விதத்தில் அதுஇவ்வுலகில் பணியாற்றிட வழிவகுத்தது இப்பொதுச்சங்கம்.

1962 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாளிலிருந்து 1965 டிசம்பர் 8ஆம் நாள் வரைநிகழ்ந்தது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம். இச்சங்கம் தொடங்கி இன்று சரியாக 25 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. கடந்த கால் நூற்றாண்டின் போது திருச்சபை வாழ்வை நிர்ணயித்தது சங்கம் தான் என்பது மிகைக் கூற்று அன்று. ஏன், சங்கம் முடிவடைந்த இருபதாம் ஆண்டில் ஓர் ஆயர் மன்றக் கூட்டமே சங்கம் பற்றி விவாதிக்கக் கூட்டப்பட்டது என்பதைக் கருதும்போது இன்றைய திருச்சபைக்கு இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது வெள்ளிடைமலை. வத்திக்கான் சங்கம் திருச்சபையில் கொணர்ந்துள்ளதாக்கம் என்ன? சங்கம் திருச்சபையின் வாழ்வையும் கண்ணோட்டத்தையும் புதுப்பித்ததா? சங்கத்தை எல்லாரும் அதன் மறுமலர்ச்சி உணர்வோடு ஏற்றுக்கொண்டனரா? சங்கத்தைத் திருச்சபையின் வாழ்வோடு இன்னும் அதிக ஆழமாக இணைப்பது எப்படி?

–மேலே எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் காணவும் வத்திக்கான் சங்கம் நிறைவுபெற்ற இருபதாம் ஆண்டு நினைவைக் கொண்டாடவும் ஆயர் மன்றப் பேரவை 1985, நவம்பர் 24ஆம் நாள் கூடி டிசம்பர் 8ஆம் நாள் முடிவெய்தியது. ஆயர் மன்றம் முடிவடைந்த நாளில்தான் — இருபது ஆண்டுகளுக்கு முன்னர் — வத்திக்கான் சங்கம் முடிவெய்திருந்தது.

இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் வகிக்கும் இடத்தை, முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் பொதுச் சங்கங்கள் திருச்சபை வாழ்வை எவ்வாறு நிர்ணயித்துள்ளன என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பது தேவையாகிறது.

வரலாற்றில் பொதுச்சங்கங்கள்

1962-1965 ஆண்டுகளில் வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பேராலயத்தில் நிகழ்ந்த பேரவைக் கூட்டத்தில் உலகனைத்திலுமிருந்து வந்த கத்தோலிக்க ஆயர்கள் பங்கேற்றனர். இம்மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

”சங்கம்” என்பதற்குத் திருச்சபை வழக்கில் இலத்தீன் மூலத்திலிருந்து ஊழரnஉடை பிறந்த என்ற சொல்லும், கிரேக்க மூலத்திலிருந்து பிறந்த ளலழென என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பின்னையசொல் ”இணைந்து வழிநடத்தல்” என்ற பொருளையும் முன்னைய சொல் ”ஒன்று கூட்டப்படல்” என்ற பொருளையும் உணர்த்துகின்றன.

வரலாற்றில் நடைபெற்ற சங்கங்களின் ஒளியில் பார்க்கும் போது சங்கம் என்பது திருச்சபையின் ஆயர்கள் திருச்சபை வாழ்வு பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்க ஒன்று கூட்டப்படல் என்ற பொருளையும் உணர்த்துகின்றன.

வரலாற்றில் நடைபெற்ற சங்கங்களின்ஒளியில் பார்க்கும்போதுசங்கம் என்பது திருச்சபையின் ஆயர்களின் திருச்சபை வாழ்வு பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்க ஒன்றுகூடுகின்ற கூட்டத்தைக் குறித்து வந்துள்ளது. ”பொது” என்னும் அடைமொழி நுஉரஅநniஉயட என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பெயர்ப்பாகும். ழுமைரஅநநெ என்னும் கிரேக்கச் சொல் ”மனிதர்கள் குடியேறியுள்ள உலகம்” என்னும் பொருளையும் ”உலகளாவிய” என்னும் பொருளையும் தரும். இவ்வாறு பார்க்கும்போது ”பொதுச்சங்கம்” என்பது உலகில் பரவியுள்ள ஆயர்கள் ஒன்றுகூடி, திருச்சபையின் நலனுக்கென முடிவுகள் எடுத்துச் செயல்பட முனைவதைக் குறிக்கும்.

திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை நிகழ்ந்துள்ள பொதுச் சங்கங்கள் மொத்தம் 21 அல்லது 22 எனப் பொதுவாகக் கணிப்பர். இப்பொதுச் சங்கங்கள் நடைபெற்ற இடம், எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றைக் கீழ்வரும் பட்டியலில் காண்க. இப்பட்டியல் அறிஞர்களால் பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்றே தவிர, எந்தெந்தச் சங்கங்கள் பொதுச் சங்கங்களாகக் கருதப்படவேண்டுமெனத் திருச்சபை அதிகாரப்பூர்வமான விதத்தில் வரையறுத்திடவில்லை.

வரிசை எண் பொதுச் சங்கம்நடைபெற்ற இடம் – ஆண்டு, ஆண்டுகள் – முக்கியவிவாத
பொருள் – முடிவு

பொதுச்சங்கம்
நடைபெற்ற இடம்
ஆண்டு முக்கியவிவாத
பொருள்-முடிவு
 1. நீசேயா 1 325 கிறிஸ்துவின் இறை இயல்பு
 2. கான்ஸ்தாந்திநோபுள் 1 381 தூய ஆவியின் இறை இயல்பு
 3. எபேசு 431 மரியா கடவுளின் தாய்
 4. கால்செதோன் 451 கிறிஸ்துவின் மனித இறை இயல்புகள்
 5. கான்ஸ்தாந்திநோபுள் 2 553 நெஸ்தோரியு கண்டனம் செய்யப்படல்
 6. கான்ஸ்தாந்திநோபுள் 3 680-681 கிறிஸ்துவின் மனித இறை இயல்புகள்
 7. நீசேயா 2 797 சுரூயஅp;ப வணக்கம்
 8. கான்ஸ்தாந்திநோபுள் 4 869-870 ஃபோசியுஸ் கண்டனம் செய்யப்படல்
 9. இலாத்தரன் 1 1123 திருச்சபை சீர்த்தம்
 10. இலாத்தரன் 2 1139 பிளவு தவிர்த்தல்
 11. இலாத்தரன் 3 1179 திருத்தந்தையர் தேர்ந்தெடுக்கும்வழிமுறைகள் நிர்ணயிக்கப்படல்
 12. இலாத்தாரன் 4 1215 பாஸ்கா கடன்
 13. இலயன்ஸ் 1 1245 மன்னர் 2 ஆம் ஃபிரடெரிக் பதவி நீக்கம்
 14. இலயன்ஸ் 2 1274 கிரேக்கர்களோடு ஒன்றிப்பு
 15. வியென்னா 1312 திருச்சபை சீர்திருத்தம்
 16. கான்ஸ்தான்சு 1414-1418 மேலைப் பெரும் பிளவுக்கு முற்றுப்புள்ளி
 17. பெர்ராரா-புளோரன்ஸ் 1437-1445 கீழைச்சபையினரோடு ஒன்றிப்பு
 18. இலாத்தரன் 5 1512-1517 திருச்சபை சீர்திருத்தம்
 19. திரிதெந்து 1545-1563 சீர்திருத்தச் சபையினருக்குஎதிர்ப்பு, திருச்சபை சீர்திருத்தம்
 20. வத்திக்கான் 1 1869-1870 உரோமை ஆயரின்முதன்மை, வழுவா வரம்
 21. வத்திக்கான் 2 1962-1965 உலகோடு உரையாடும் திருச்சபை

முதல் எட்டு பொதுச் சங்கங்களும் (325-870) உரோமைப் பேரரசின்தலை நகராகிய கீழைப் பகுதியில் விளங்கிய கான்ஸ்தாந்திநோபுள் உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பெற்றன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை வரையறுப்பதே இப்பொதுச் சங்கங்களின் முக்கிய நோக்கமாயிருந்தது. நீசேயா நம்பிக்கை அறிக்கை தவிர மூவொரு கடவுளின் இயல்பு, கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள், தூய ஆவியின் இறை இயல்பு, மரியா கடவுளின் தாயாக இருக்கிறார் போன்ற நம்பிக்கை உண்மைகள் கிரேக்க மெய்யியல் பின்னணியில் துல்லியமாக வரையறுக்கப்பட்டது இப்பொதுச் சங்கங்களில்தான்.மேலே குறிப்பிட்ட பொதுச் சங்கங்களில் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தில் மட்டுமே உண்மையில் உலகமனைத்திலுமிருந்து வந்திருந்த 2900க்கும் மேற்பட்ட ஆயர்கள் அனைவரும் பங்கேற்றனர். வரலாற்றிலேயே முதன் முதலாக இப்பொதுச் சங்கத்தில்தான் உலகனைத்திலுமுள்ள மக்களின் குரல் ஒலித்தது. திருச்சபையின் எல்லா மரபுச் செல்வங்களிலும் தாக்கமும் உணரப்பட்டது. எல்லாப் பொதுச் சங்கங்களிலும் அவ்வப்போது வாழ்ந்த எல்லா ஆயர்களும் பங்கு கொள்ளவில்லை என்று வரலாற்றிலிருந்து அறிகிறோம். எடுத்துக்காட்டாக, ஐந்தாம் பொதுச் சங்கமாகிய 2ஆம் கான்ஸ்தாந்திநோபுள் சங்கத்தி;ல் கீழைத் திருச்சபை ஆயர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அதுபோல பிற்காலத்தில் மேற்குப் பகுதியில் நிகழ்ந்த பொதுச் சங்கங்களில் மேலைத் திருச்சபை ஆயர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அடுத்து நடைபெற்ற ஏழு பொதுச் சங்கங்களும் (1113-1312) உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்தன. கிரேக்க மொழியின் இடத்தை இலத்தீன் மொழி பிடித்துக்கொண்டது. திருச்சபையும் அரசு சமூகமும் ஒன்றோடொன்று நெருங்கிய விதத்தில் பிணைந்திருந்த காலமது. திருத்தந்தையர் இச்சங்கங்களைக் கூட்டினர். இவை பெரும்பாலும் திருச்சபையில் நிலவிய சீர்கேடுகளைத் திருத்தவும் ஒழுங்கு கொணரவும் கூட்டப்பெற்றன.

தொடர்ந்து நிகழ்ந்த மூன்று பொதுச் சங்கங்கள் (1414-1517) திருச்சபையில் ஏற்பட்ட பெரும் பிளவைச் சீர்படுத்தமுனைந்தன. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பேர் தம்மையெ உரோமை ஆயராகக் கருதியதால் திருச்சபையில் பெரும் பிளவு தோன்றியது. அஃதோடு கூட திருச்சபையை ஒரு குடியரசு போலக் கருதிய சிலர் பொதுச் சங்கம் திருந்தந்தையைப் பதவி நீக்கம் செய்யமுடியும் என்று வாதாடியதால் குழப்பங்கள் ஏற்படலாயின.

16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற திரிதெந்து பொதுச் சங்கம் (1545-1563) பல அரசியல் சிக்கல்களுக்கும் லூத்தர், கால்வின், ஸ்விங்கிலி போன்ற சீர்திருத்தவாதிகளின் தாக்குதல்களுக்குமிடையே நிகழ்ந்தது. இச்சங்கத்தின் வௌ;வேறு அமர்வுகளில் எல்லா ஆயர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் சங்கமோ திருச்சபை அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டது. சீர்திருத்தவாதிகள் விவாதத்துக்கு உட்படுத்திய கருத்துகளை, குறிப்பாக அருளடையாளங்கள், அருள், திருச்சபை ஆட்சி அமைப்பு, மீட்பு, நம்பிக்கை போன்றவற்றைச் சங்கம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ஆயினும் சீர்திருத்தவாதிகளின் உண்மையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் அறிய சங்கத்தில் அவ்வளவு முயற்சி செய்யப்படவில்லை. குறைகாணும் மனப்பான்மை மேலோங்கியது.

முதலாம் வத்திக்கான் பொதுச் சங்கம் ஒருசில மாதங்களே நிகழ்ந்தது. (8 டிச 1869-18 ஜூலை 1870). பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஒத்திப் போடப்பட்டது. அதிகாரப் பூர்வமாக அது முடிவுக்குக் கொணரப்படவில்லை. திரிதெந்துப் பொதுச் சங்கம் முடிவடைந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னரே முதலாம் வத்திக்கான் பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. ‘திருச்சபை’ என்ற பொருள்பற்றி விவாதித்த இச்சங்கம் திருத்தந்தையின் முதன்மை மற்றும் வழுவாவரம் என்பவற்றை வரையறுத்ததோடு நின்றுவிட்டது. திருத்தந்தை 9ஆம் பீயுவின் ஆட்சிக்குக் கீழிருந்த உரோமை மண்டலத்தை வட இத்தாலிய படைகள் கைப்பற்றிவிடவே ;சங்கம் கால வரையறையின்றித் தள்ளிப் போடப்பட்டது. எனவே திருச்சபை பற்றி முழுமையான விவாதம் முதலாம் வத்திக்கான் சங்கத்தில் நிகழவில்லை. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் (1962-1965) எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை உண்மையை வரையறுக்கவோ தப்பறைகளைக் கண்டனம் செய்யவோ கூட்டப்படவில்லை. மாறாக, பிற கிறிஸ்தவச் சபைகளோடு உறவு ஏற்படுத்தல், உலக சமயங்களோடும் எல்லா மக்களோடும் இன்றைய உலகோடும் உரையாடலில் ஈடுபடுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டது இச்சங்கம். சங்கத்தின் செயல்திட்டம் திருச்சபையின் உள்வாழ்வு பற்றியும் உலகோடு திருச்சபைக்குள்ள உறவு பற்றியும் அமைந்தது. சங்கம் செயல்படுத்துமாறு அறிவித்த 16 ஏடுகளும் 20 ஆம் நூற்றாண்டுத் திருச்சபைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக அமைந்துள்ளன.

திருச்சபை வரலாற்றில் நிகழ்ந்த பொதுச் சங்கங்கள் பற்றி மேலே அளிக்கப்பட்டவை சிறு குறிப்புகள் மட்டுமே. இப்பொதுச் சங்கங்கள் திருச்சபையின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை ஆகும். ஆயர்களின் மாநாடாகப் பொதுச் சங்கங்கள் இருந்துள்ளன என்பது உண்மையென்றாலும், அவற்றில் திருச்சபையின் தன்னுணர்வு மிகவும் கூர்மையடைகிறது எனலாம். பொதுச் சங்கம் ஆயர் குழுத் தத்துவத்தின் ஒரு சீரிய வெளிப்பாடு. அதாவது, திருத்தூதரின் வழி வருகின்ற ஆயர்கள் ஒருங்கிணைந்து தம் பொறுப்பைச் செயல்படுத்தும் வழிமுறையாகப் பொதுச் சங்கங்கள் உள்ளன. முதல் எட்டு நூற்றாண்டுகளில் நடைபெற்ற பொதுச் சங்கங்கள் உரோமைப் பேரரசர்களால்
கூட்டப்பட்டன என்றாலும் பொதுவாகத் திருத்தந்தையின் பதிலாள்கள் அவற்றில் கலந்துகொண்டனர். பிற்காலத்தில் பொதுச் சங்கங்கள் திருத்தந்தையால் மட்டுமே கூட்டப்பட்டன.

பொதுச் சங்கங்கள் தவிர திருச்சபை வரலாற்றின் முதல் நூற்றாண்டிலிருந்தே தனிச் சங்கங்கள், மண்டலச் சங்கங்கள் வௌ;வேறு பகுதிகளில் நடந்துள்ளன. அவை கொள்கைகளை வரையறுத்தன, நடைமுறை ஒழுங்குகளை வகுத்துத் தந்தன.

திருச்சபை வாழ்வில் 2 ஆம் வத்திக்கான் சங்கம்

1869-1870 இல் நடந்த முதலாம் வத்திக்கான் சங்கம் திருத்தந்தையின் வழுவாவரத்தை நம்பிக்கை உண்மையாக வரையறுத்த பிறகு, இனிமேல் பொதுச் சங்கம் திருச்சபைக்குத் தேவையில்லை என ஒருசிலர் நினைத்தனர். அதனால் திருத்தந்தை 23ஆம் யோவான் 1959, சனவரி 25ஆம் நாள் பொதுச் சங்கம் ஒன்றைக் கூட்டுவதாக அறிவித்தது எதிர்பாராத ஒன்றாக அமைந்ததில் வியப்பில்லை.

இன்று 2ஆம் வத்திக்கான் சங்கம் தொடங்கி 35 ஆண்டுகள் ஆகின்றன. பின்னோக்கிப் பார்க்கும்போது இச்சங்கம் இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையில் உண்மையிலேயே புதியதொரு உயிரோட்டமான மறுமலர்ச்சியைக் கொணர்ந்தது என்பதை யாரும் மறுக்கவியலாது. இன்றைய உலகோடு உரையாடலில் ஈடுபட்டு, திறந்த மனத்தோடு பிற சமயங்களையும் பண்பாடுகளையும் அணுகி, நீதிக்காக உழைக்கும் மனநிலையை உருவாக்குவதில் 2ஆம் வத்திக்கான் சங்கம் இன்றைய திருச்சபைக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

தமிழ் மொழியில் சங்க ஏடுகள்

வத்திக்கான் சங்கம் முடிவடைந்து, சங்கப் போதனைகள் 6 ஏடுகளாக வெளிவந்த உடனேயே அப்போதனைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்திய மொழிகளிலேயே முதலாவதாக தமிழில்தான் ”சங்க ஏடுகள்” வெளியாயின. குறுகிய காலத்தில், சிறப்பான விதத்தில் மொழிபெயர்ப்புப் பணியை ஏற்றுச் செயல்படுத்திய பெருமை திருச்சிராப்பள்ளி தூய பவுல் இறையியல் கல்லூரி மாணவர்களைச் சாரும். இவர்களோடு செண்பகனூர் திரு இருதயக் கல்லூரி மற்றும் பூனா திருத்தந்தைத் திருப்பணிப் பயிற்சியகத் தமிழ்க் கழகம் ஆகியவை ஒத்துழைத்தன. 1967இல் வெளியாகிய இந்த முதல் மொழி பெயர்ப்புக்கு ஊக்கமூட்டி ஆதரித்தவர் அந்நாள் தூய பவுல் இறையியல் கல்லூரித் தலைவராயிருந்த பணி சேம்சு லோசே, சே.ச.ஆவார். சங்க ஏடுகள் மொழிபெயர்ப்புக் குழுவின் பொதுச் செயலராக பணி.கு.எரோணிமுசு செயல்பட்டார். இறையியல், தமிழ், இலத்தீன் வல்லுநர் பலர் மொழிபெயர்ப்பின்போது உதவினர். சங்கம் வெளியிட்ட 16 ஏடுகள் முழுநூலாக 3000 படிகள், மற்றும் தனித்தனி ஏடுகளாக 5000 படிகள் அச்சடிக்கப்பட்டன. ஒவ்வொரு ஏட்டுக்கும் முன்னுரையாக உட்புகுமுன் என்ற பகுதியை இந்திய ஆயர்கள் மற்றும் இறையியல் அறிஞர்கள் வழங்கினர். பம்பாய் பேராயராக இருந்த வலேரியன் கர்தினால் கிராசியாசு மொழிபெயர்ப்புக் குழுவினரைப் பாராட்டி அணிந்துரை வழங்கினார்.

தமிழகத்திலும் தமிழ் பயிலும் இடங்களிலும் சங்க ஏடுகளுக்குச் சிறப்பான வரவேற்பு இருந்தது என்பது 1968இல் இரண்டாம் பதிப்பு வெளியானதிலிருந்து தெளிவாகிறது. முதல் பதிப்பில் ஆங்காங்கே திருத்தங்கள் செய்து இரண்டாம் பதிப்பை வெளிக்கொணர்வதில் செயலராகப் பணியாற்றி ஊக்கமுடன் உழைத்தவர் சகோ.செ.மாணிக்கம் ஆவார். இப்பதிப்பில் 5000 படிகள் வெளியிடப்பட்டன.

ஒருசில ஆண்டுகளில் சங்க ஏடுகளின் படிகள் எல்லாம் விலையாகிவிடவே புதியதொரு பதிப்புக்கான தேவை உணரப்பட்டது. பணி. பவுல் லியோன், கு.எரோணிமுசு ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருத்தி விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்புக்கான வேலை 1981இல் தொடங்கியது.

மூன்றாம் பதிப்பின் சிறப்புக் கூறுகள்

1.1967இல் செய்யப்பட்ட முதல் மொழி பெயர்ப்பும் அதன் இரண்டாம் பதிப்பும் ஆங்காங்கே தெளிவில்லாமலும் நீண்ட சொற்றொடர் அமைப்புடையனவாகவும் இருந்ததாகப் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனவே மூன்றாம் பதிப்பை வெளியிடுமுன் புதிதாக மொழிபெயர்த்தல் நலம் எனத் தோன்றியது. இதைக் கருத்தில் கொண்டு வத்திக்கான் சங்க ஏடுகள் பதினாறையும் நேரடியாக இலத்தீன் மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கும் பணி தொடங்கப்பட்டது. தேவையான இடங்களில் முதல் மொழிபெயர்ப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் சிறு திருத்தமே புகுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, தமிழ் நடை ஆற்றொழுக்காக அமையும் வண்ணம் தனிக்கவனம் செலுத்தியுள்ளோம். அதே நேரத்தில், சங்கம் வெளியிட்ட ஏடுகளின் கருத்துகள் எவ்விதத்திலும் திரிபுறாமல் அப்படியே தமிழில் வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை இயன்றவரை நிறைவேற்றியுள்ளோம்.

ஒவ்வொரு ஏட்டையும் புதிதாக மொழிபெயர்த்துத் திருத்திய அறிஞர்களின் பெயர்ப் பட்டியல் இதோ:

ஏடு மொழிபெர்ப்புதிருத்தம;
1. திருவழிபாடு பணி. இஅமலதாஸ்
பணி. ஒய்.எ.லூர்து, சே.ச
2. சமூகத்தொடர்புக்கருவிகள் பணி.அமுதன்
பணி. எஸ். எம். ஜார்ஜ;
3. திருச்சபை பணி.ஏ.எம்.லூர்துசாமி, சே.ச
4. கத்தோலிக்கக்கீழைச்சபைகள் பணி.பவுல்சி.சேசுராசுசே.ச
5. கிறிஸ்தவஒன்றிப்பு பணி. பவுல்சி.சேசுராசுசே.ச
பணி. ஜே.ஆர்.நற்சீசன்
6. திருச்சபையில்ஆயர்களின்அருள்பணி பணிஒய். இருதயராசு
7. துறவறவாழ்வைப்புதுப்பித்தல் பணி.தொ.செயராசுசே.ச
8. திருப்பணிப்பயி;;ற்சி பணி. ச.தே. செல்வராசு
9. கிறிஸ்தவக்கல்வி பணி.தேவதாசுசே.ச.
10. கிறிஸ்தவமல்லாச்சமயங்களோடுதிருச்சபைக்குள்ளஉறவு பணி.சேவியர்இருதயராசுசே.ச
11. இறைவெளிப்பாடு பணி.கு.எரோணிமுசு
12. பொதுநிலையினரின்திருத்தூதுப்பணி பணி.ஞா.இஞ்ஞாசிசே.ச
13. சமயச்சுதந்திரம் பணி.அ.இருதயம்
14. திருச்சபையின்நற்செய்திப்பணி பணி.வெனான்சியுசு
15. திருப்ணியாளர்களின்பணியும்வாழ்வும் பணி.ஜே.எஃப்.தனிஸ்லாசு
16. இன்றையஉலகில்திருச்சபை பணி. வ. பவுல்லியோன்

கைம்மாறு கருதாது மொழிபெயர்ப்புப் பணியில் மகிழ்ச்சியோடு ஈடுபட்டுச் செயலாற்றிய இவ்வறிஞர்களுக்கு எம் உளமார்ந்த நன்றி.

2. புதிய மொழிபெயர்ப்பு வேலை தொடங்கியபோதே வத்திக்கான் சங்கம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்திருந்தன. வத்திக்கான் சங்கம் வழங்கிய 16 போதனை ஏடுகளுக்குப் பிறகு, அந்த ஏடுகளில் விவாதிக்கப்பட்ட மையக் கருத்துகள் பற்றிய பற்பல ஏடுகள் திருச்சபை ஆசிரியத்தால் தொடர்ந்து வெளியிடப்பட்டன. எனவே புதிய மொழிபெயர்ப்பு சங்க ஏடுகள் பதினாறையும் வெளியிடுவதோடுகூட சங்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெளியான முக்கியமான ஏடுகளின் கருத்துத் தொகுப்பையாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதன்படி சங்க ஏடு ஒவ்வொன்றுக்கும் இறுதியில் ”நிறைவுரை” அந்த ஏட்டில் விவாதிக்கப்பட்ட பொருள் குறித்து சங்க இறுதியிலிருந்து இன்றுவரை வெளிவந்த முக்கியமான திருச்சபை ஆசிரிய ஏடுகளின் கருத்துச் சுருக்கத்தை வழங்குகிறது. ”நிறைவுரைகளில்” பெரும்பாலும் திருத்தந்தையரின் போதனை ஏடுகளே குறிக்கப்பட்டுள்ளன என்றாலும், ஆயர் பேரவைகள் மற்றும் ஆயர் மன்றங்களின் போதனைச் சுருக்கமும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. ”நிறைவுரைகளில்” பெரும்பாலும் திருத்தந்தையரின் போதனை ஏடுகளே குறிக்கப்பட்டுள்ளன என்றாலும், ஆயர் பேரவைகள் மற்றும் ஆயர் மன்றங்களின் போதனைச் சுருக்கமும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. ”நிறைவுரைகள்” எழுதிய அறிஞர்களுக்கும் எம் இதயங்கனிந்த நன்றி.

3. வத்திக்கான் சங்கம் முடிவடைந்த இருபதாம் ஆண்டு நினைவாக உரோமையில் கூடிய ஆயர்; மன்றப் பேரவை (நவ 24-டிச 8, 1985) ”இறுதி அறிக்கை” என்னும் பெயரில் வெளியிட்ட முக்கியமான ஏடு இவண் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏட்டை மொழிபெயர்த்தவர் பணி.செ.சூசைமாணிக்கம். அன்னாருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

4. திருத்தி விரிவாக்கப்பட்ட மூன்றாம் பதிப்பில் சுருக்கக் குறியீடுகள், கலைச் சொற்கள், அகர வரிசைப் பொருளடைவு ஆகிய பகுதிகள் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. ”நிறைவுரைகளில்” காணப்படும் கருத்துகளை எளிதில் கண்டுகொள்ள இயலுமாறு அவற்றிற்கும் ஓர் அகர வரிசை பொருள் அட்டவனை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

நன்றிக்கடன்…

வத்திக்கான் சங்கம் வழங்கிய போதனையும் அது திருச்சபை வாழ்வில் கொணர்ந்த மறுமலர்ச்சியும் சங்கத்திற்குப் பிற்பட்ட கால விழிப்புணர்வும் தமிழ் கூறு நல்லுலகத் திருச்சபையில் தாக்கம் கொணர வேண்டும் என்ற கருத்தால் உந்தப்பட்டு இந்த மூன்றாம் பதிப்பை வெளியிடும் பணியில் இறங்கினோம். இப்பணி நடைபெற்ற காலம் முழுவதிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வழிகாட்டியோர் தூய பவுல் இறையியல் கல்லூரித் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆவர். எங்கள் கல்லூரியே சங்க ஏடுகளை வெளியிடும் நிறுவனமுமாகும். இவர்களுக்கு எம் நன்றிக்கடன் உரித்தாகுக.

கடந்த ஏழு ஆண்டுகளாகச் சங்க ஏடுகள் அச்சுப் பணியிலும் பிற துறைகளிலும் மனதார ஒத்துழைத்த எங்கள் இறையியல் மாணவர்கள் மிகப் பலர். அவர்களுள் சிலர் ஏற்கெனவே திருப்பணியாளர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் எம் உளங்கனிந்த நன்றியை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம். இவர்களுள் பின்வருவோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கோர். பணியாளர்கள் ஜெகனிவாசகர், வின்சென்ட் பால்ராசு, அந்துவான், சோசப் சேவியர் ராசு, வின்சென்ட், அந்தோனி சேசுதாசு, இருதயராசு, திருத்தொண்டர் சகாய சான் அந்தோனி, பிரான்சிசு, சகோதரர் எர்னஸ்ட் அந்தோனிசாமி, மரியதாசு, உபால்டு, வற்கீசு, தென்சில் ராசா.

பற்பல சிக்கல்களுக்கு நடுவே பொறுமையோடும் துணிச்சலோடும் இந்நூலை அழகுற அச்சேற்றித் தந்த ஜோதி பிரிண்டர்ஸ் நிறுவனத்தாருக்கும் கருத்துச் செறிவான அட்டைப்படம் வரைந்த ஓவியர் விக்டர் சே.ச அவர்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக.

இறுதியாக…

1985 இல் நிகழ்ந்த ஆயர் மன்றத்தின் ”இறுதி அறிக்கை”யிலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இம்முன்னுரையை முடிவுக்குக் கொணர்தல் பொருத்தமாகத் தெரிகிறது. அந்த அறிக்கையில் ஆயர்கள் தெரிவித்துள்ள விருப்பம் நம் தமிழகத் திருச்சபையிலும் நிறைவேற வேண்டுமென்பதே எம் பேரவா.

”சங்க முடிவுகளைப் பற்றிய புதிய, மிகவும் பரந்த, ஆழமான அறிவையும் செயலாக்கத்தையும் குறிக்கோளாகக் கொண்டு, அருள் பணி சார்ந்த செயல் திட்டம் ஒன்று இனி வரும் ஆண்டுகளில் தனிச் சபைகளில் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக, சங்க ஏடுகளையே புதிதாக வெளியிட்டுப் பரப்புவதாலும், நம்பிக்கைகொண்டோர் நன்கு புரிந்து கொள்ளும் முறையில் அவற்றின் விளக்கங்களைக் கொண்டுள்ளது ஆராய்ச்சி ஏடுகளை வெளியிடுவதாலும் இந்நோக்கத்தை அடையலாம்” (”இறுதி அறிக்கை”இ ஐஇ 6: சங்க ஏடுகள், பக்.802)

பணி. வ.பவுல் லியோன்
பணி. கு.எரோணிமுசு
பதிப்பாசிரியர்கள்

தூய பவுல் இறையியல் கல்லூரி
திருச்சிராப்பள்ளி
அக்டோபர் 11, 1987

முதல் பதிப்பின் முன்னுரை (1967);

”இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் ஐயமேதுமின்றித் திருச்சபையின் மாபெரும் நிகழ்ச்சிகளுள் ஒன்று” என்கிறது சங்கத்தை முடிவுக்குக் கொணர்ந்த திருத்தூதத் திருமுகம். ஆம், இது முற்றிலும் சரியே. உண்மையில் இச்சங்கம் தூய ஆவியின் புதிய ஒரு வகையாகும். இவ்வருகையின்போது இறை ஆவியானவர் அருள்மாரி பெய்தார். சங்கத் தந்தையர்வழி உலகிற்குக் கற்பித்தார். அவர் கற்பித்தவற்றையே பதினாறு ஏடுகளாகத் திருச்சங்கம் நமக்கு அருளியுள்ளது.

இச்சங்க ஏடுகள் திருச்சபையின் உண்மைப் படிப்பினைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன. திருச்சபைத் தாயின் அன்புக் குரலை நம் செவிகளில் ஒலிக்கச் செய்கின்றன. இவ்வன்புக் குரலைத் தமிழ் மக்களும் கேட்கச் செய்யும் பணியில் தகுதியும் திறனும் பெற்றோர் இறங்குவர் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் ஏமாற்றமடைந்தோம். இந்நிலையில் சங்க ஏடுகளைத் தமிழாக்க வேண்டிய தேவையை உணர்ந்தோம். இன்று ‘சங்க ஏடுகள்’ உங்கள் கைகளில் தவழ்கின்றது.

சங்க ஏடுகள் தமிழில் உருவாகுவதற்கு முதற்காரணமாயிருந்தவர் எம் அன்புத்தந்தை தூய பவுல் இறையியல் கல்லூரித் தலைவர் சேம்சு லோசே, சே.ச. அடிகளாவர். சங்க ஏடுகளை மொழி பெயர்க்க ஊக்கம் தந்தார். உறுதுணையாக இருந்தார். வேண்டிய உதவி வேண்டும்போதெல்லாம் செய்தார். அவற்றை வெளியிடுபவரும் அவரே. தமிழ் மக்கள் யாவரும் திருச்சபையின் படிப்பினைகளை உடனுக்குடன் கற்றறியும் வாய்ப்புப் பெறவேண்டும் எனும் பெருநோக்குடைய இத்தமிழன்பருக்குக் கை கூப்பி நன்றி நவில்கிறோம்.

சங்க ஏட்டு மொழிபெயர்ப்பில் பர்க்.சே.ச. அடிகளின் பணி பெரியது: இவர் சங்க ஏடுகளைத் தமிழாக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஊக்குவித்து, எண்ணற்ற உதவிகள் புரிந்தார். இப்பணியில் பெருந்துணையும் பேராதரவுமாய் இருந்த இன்னொருவர் லூர்துசாமி, சே.ச. அடிகளாவர். இவர்கள் இருவருக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இம் மொழிபெயர்ப்பிலே முதல் முயற்சி எடுத்து, முன்னின்று செயலாற்றிய செண்பகனூர் ஞா.இஞ்ஞாசி, சே.ச. அடிகள், ஜெயராசு, சே.ச.ஆகியோருக்கும் தமிழுலகம் நன்றிக் கடன் பட்டது.

இறையியல், தமிழ், இலத்தீன் வல்லுநர் பலர் சங்க ஏடுகளின் மொழிபெயர்ப்பின்போது பற்பல திருத்தங்கள் தந்தனர். மொழி பெயர்ப்பில் திருத்தம் தந்த அடிகள் ஜெ.எஃப். தனிஸ்லாசு, பி.ஏ., டி.சி.எல்., சி.கே.சுவாமி, சே.ச., ஒய்.இருதயராசு, நற்சீசன், எல்.பி.எச்., எல்.டி. அமல்ராசு, எம்.ஏ., பிஎச்டி., எஸ்.டி.எல்., மத்தியராசு, எஸ்.டி.எல்., டிப் கேற்றி ஆகிய அனைவருக்கும் எம் இதயம் கனிந்த நன்றி. மொழியியல் திருத்தம் தந்துதவிய உயர்திரு.ஐயன் பெருமாள் கோனார், சம்மனசு எம்.ஏ., சாமிமுத்து, எம்.ஏ., ஆகிய தமிழ் அறிஞர்களுக்கும் எம் உளமார்ந்த நன்றி.

ஆசிச் செய்தி அருளிய வணக்கர்தினால் ஆண்டகைக்கும், சங்க ஏடுகளுக்கு முன்னுரைகள் தந்த பேராயர், ஆயர், பிற அறிஞர்கள் ஆகியோருக்கும், அழகுற அச்சிட்டுத்தந்த ஆனந்த லூர்து அடிகளாருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

திருச்சபையின் படிப்பினைகளை வாசகரின் உள்ளங்களுக்கு இவ்வேடுகள் வழங்கட்டும்! உள்ளங்களிலிருந்து எதிரொலித்து அலை உலகெங்கும் முழங்கட்டும்!!
பணி. கு.எரோணிமுசு
பொதுச் செயலர்,

தூய பவுல் இறையியல் கல்லூரி
திருச்சிராப்பள்ளி
சனவரி 1, 2000 சங்க ஏடுகள் மொழிபெயர்ப்புக் குழு

உள்ளே…

சுருக்கக் குறியீடுகள்
சங்கம் கூடுமாறு அழைப்பு
மனித குலத்திற்குச் செய்தி
சங்கம் வழங்கிய 16 ஏடுகள்

திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம்
உட்புகுமுன் (பணி.சோ.பிரிட்டோ, சே.ச)

முன்னுரை
1. திருவழிபாட்டைச் சீர்படுத்துவதற்கும் அதைப் பேணி வளர்ப்பதற்குமான பொதுத் தத்துவங்கள்
2. நற்கருணை என்னும் தூய்மைமிகு மறைநிகழ்வு
3. பிற அருளடையாளங்களும் அருள்வேண்டல் குறிகளும்
4. திருப்புகழ்மாலை
5. திருவழிபாட்டு ஆண்டு
6. திரு இசை
7. திருக்கலையும் திருவழிபாட்டுப் பொருள்களும்

பிற்சேர்க்கை: ஆண்டுக் குறிப்பேட்டைத் திருத்துவது பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் வெளியிடும் அறிக்கை

சமூகத் தொடர்புக் கருவிகள் பற்றிய விதித் தொகுப்பு
உட்புகுமுன் (அமுதன் அடிகள்)

1. சமூகத் தொடர்புக் கருவிகளை நன்முறையில் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள்
2. சமூகத் தொடர்புக் கருவிகளும் கத்தோலிக்க திருத்தூதப் பணியும்

திருச்சபை பற்றிய கோட்பாட்டு விளக்கம்
உட்புகுமுன் (பணி. ஆரொக்கியதாசு, சே.ச.)

1. இறைத்திட்டத்தில் திருச்சபை
2. இறைமக்கள்
3. திருச்சபையின் திரு ஆட்சியமைப்பும் குறிப்பாக ஆயர்நிலையும்
4. பொதுநிலையனர்
5. திருச்சபையில் தூய்மைநிலையடைய அனைவருக்கும் அழைப்பு
6. துறவிகள்
7. பயணத் திருச்சபையின் நிறைவுக்கால இயல்பும் விண்ணகத் திருச்சபையோடு இதன் ஒன்றிப்பும்
8. கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும் மறை பொருளில் இறையன்னை தூய கன்னிமரியா

— சங்க நடவடிக்கைகளிலிருந்து:
அறிவிப்புகள்
விளக்கமளிக்கும் முன்குறிப்பு

கத்தோலிக்கக் கீழைச் சபைகள் பற்றிய விதித்தொகுப்பு
உட்புகுமுன் (பணி.சே.சேசுராசு)

முன்னுரை
1. தனிச்சபைகள் அல்லது வழிபாட்டு முறைகள்
2. கீழைச் சபைகளின் அருள் மரபுக் கருவூலத்தைப் பாதுகாத்தல்
3. கீழைச் சபை மறைதந்தையர்
4. அருளடையாளங்களைப் பற்றிய ஒழுங்கு முறைகள்
5. இறைவழிபாடு
6. பிறக் கிறிஸ்தவச் சபைச் சகோதரர்களோடு உறவாடல்

முடிவுரை
அறிவிப்பு

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய விதித்தொகுப்பு
உட்புகுமுன் (பணி.தே.அல்போன்சு)

முன்னுரை
1. ஆயர்களும் அனைத்துலகத் திருச்சபையும்
2. ஆயர்களும் அவர்களின் தனிப்பட்ட சபைகளும் அல்லது மறைமாவட்டங்களும்
3. பல சபைகளின் பொதுநலத்தில் ஆயர்களின் ஒத்துழைப்பு

துறவற வாழ்வைப் புதுப்பித்தல் பற்றிய விதித் தொகுப்பு
உட்புகுமுன் (பணி.ஆர்.சே.இராசா. சே.ச)

முன்னுரை
புதுப்பித்தலுக்கான பொது விதிகள்
புதுப்பிப்பதற்கான நடைமுறை அளவுகோல்கள்
புதுப்பித்தலுக்குப் பொறுப்பானவர்கள்
எல்லா வகைத் துறவுவாழ்வுக்கும் பொதுவானவைகள்
அருள்வாழ்வின் முதன்மை
ஆழ்தியானச் சபைகள்
திருத்தூதுப் பணியாற்றும் சபைகள்
ஆசிரமத் துறவு வாழ்வைக் காத்தல்
பொதுநிலைச் சபைகள்
உலகுசார் துறவு அமைப்புகள்
கற்பு, ஏழ்மை, கீழ்படிதல், கூட்டுவாழ்வு

முடிவுரை

திருப்பணிப் பயிற்சி பற்றிய விதித் தொகுப்பு
உட்புகுமுன் (பணி ச.தே.செல்வராசு)

முன்னுரை
1. ஒவ்வொரு நாட்டிலும் திருப்பணிப் பயிற்சி முறையில் செயல்படுத்த வேண்டிய திட்டம்
2. திருப்பணிநிலைக்கான அழைத்தலை ஆர்வத்துடன் ஊக்குவித்தல்
3. முதுநிலைத் திருப்பணிப் பயிற்சியகங்களை முறைப்படுத்தல்
4. அருள் வாழ்வுப் பயிற்சியில் ஆழ்ந்த கவனம் செலுத்தல்
5. திருப்பணிப் படிப்பைத் திருத்தி அமைத்தல்
6. தகுந்த அருள்பணிப் பயிற்சியை ஊக்குவித்தல்
7. படிப்புக் காலத்துக்குப்பின் நிறைவு செய்யப்பட வேண்டிய பயிற்சி
முடிவுரை

கிறிஸ்தவக் கல்வி பற்றிய அறிக்கை
உட்புகுமுன் (பணி. ச.தே. செல்வராசு)

முன்னுரை
முடிவுரை

கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு பற்றிய அறிக்கை
உட்புகுமுன் (பணி. கு. எரோணிமுசு)

முன்னுரை
1. வெளிப்பாடு
2. வழிவழியாக வழங்கப்படும் இறைவெளிப்பாடு
3. விவிலியத்தின் இறை ஏவுதலும் அதன் பொருள் விளக்கமும்
4. பழைய ஏற்பாடு
5. புதிய ஏற்பாடு
6. திருச்சபையின் வாழ்வில் விவிலியம்

பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி பற்றிய விதித் தொகுப்பு
உட்புகுமுன் (ஆயர் யூசீன் டி சூசா)

முன்னுரை
1. திருத்தூதுப் பணிக்கென பொது நிலையினர் பெறும் அழைப்பு
2. அடைய வேண்டிய குறிக்கோள்கள்
3. திருத்தூதுப் பணிக்கான பல்வேறு துறைகள்
4. திருத்தூதுப் பணியின் பல்வேறு வழிமுறைகள்
5. கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறை
6. திருத்தூதுப் பணிக்கான பயிற்சி தூண்டுரை

சமயச் சுதந்திரம் பற்றிய அறிக்கை
உட்புகுமுன் (ஆயர். பா. அந்தோனி)

முன்னுரை
1. சமயச் சுதந்திரம் பற்றிய பொதுவான தத்துவம்
2. இறை வெளிப்பாட்டு ஒளியில் சமயச் சுதந்திரம்

திருச்சபையின் நற்செய்திப் பணி பற்றிய விதித் தொகுப்பு
உட்புகுமுன் (பணி. எ. சோசப் செபாஸ்ழன்)

முன்னுரை
1. கோட்பாட்டு அடிப்படைகள்
2. நற்செய்திப் பணி
3. தனித் திருச்சபைகள்
4. நற்செய்திப் பணியாளர்
5. நற்செய்திப் பணியின் அமைப்பு முறை
6. ஒத்துழைப்பு

திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும் பற்றிய விதித் தொகுப்பு
உட்புகுமுன் (பணி. எ. சான் குழந்தை)

முன்னுரை
1. திருச்சபையின் பணியில் திருப்பணிநிலை
2. திருப்பணியாளர்களின் பணி
3. திருப்பணியாளர்களின் வாழ்வு முடிவுரையும் அறிவுரையும்

இன்றைய உலகில் திருச்சபை பற்றிய அருள்பணிக் கோட்பாட்டு விளக்கம்
உட்புகுமுன் (பணி. வ. பவுல் லியோன்)

முன்னுரை
தொடக்கவிளக்கவுரை: இன்றைய உலகில் மனிதரின் நிலைமை
முதற்பகுதி: திருச்சபையும் மனிதரின் அழைப்பும்
1. மனிதரின் மாண்பு
2. மனித சமூகம்
3. உலகம் அனைத்திலும் மனிதரின் ஈடுபாடு
4. இன்றைய உலகில் திருச்சபையின் பணி

இரண்டாம் பகுதி: மிக முக்கியமான சில பிரச்சினைகள்
1. திருமணம் மற்றும் குடும்பத்தின் மாண்பைப் பேணி வளர்த்தல்
2. பண்பாட்டு வளர்ச்சியைத் தகுந்த முறையில் மேம்படுத்தல்
3. சமூக – பொருளாதார வாழ்வு
4. நாட்டு அரசியல் வாழ்வு
5. அமைதியைப் பேணலும் அனைத்து நாட்டுச் சமூகத்தை வளர்த்தல்

சங்கம் வெளியிட்ட செய்திகள்

சங்கத்தை முடிவுக்குக் கொணர்ந்த திருத்தூது மடல்

ஐஐ 2ஆம் வத்திக்கான் சங்க முடிவின் 20 ஆம் ஆண்டு நிறைவின் போது நிகழ்ந்த

ஆயர் மன்றத்தின் இறுதி அறிக்கை

கலைச் சொற்கள்

அகர வரிசைப் பொருளடைவு

சுருக்கக் குறியீடுகள்

(ஐ) விவிலிய சுருக்கக் குறியீடுகள்

1 அர அரசர்கள் முதல் நூல்
இச இணைச் சட்டம்
இபா இனிமைமிகு பாடல்
உரோ உரோமையருக்கு எழுதிய திருமுகம்
எசே எசேக்கியேல்
எண் எண்ணிக்கை
எபி எபிரேயருக்கு எழுதிய திருமுகம்
எபே எபேசியருக்கு எபுதிய திருமுகம்
எரே எரேமியா
எஸ்ரா எஸ்ரா ஆகமம்
எசா எசாயா ஆகமம்
ஓசே ஓசேயா ஆகமம்
கலா கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்
1கொரி கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
2 கொரி கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
கொலோ கொலோசையருக்கு எழுதிய திருமுகம்
2 சாமு சாமுவேல் இரண்டாம் நூல்
சாஞா சாலமோனின் ஞானம்
சீஞா சீராக்கின் ஞானம்
செப் செப்பனியா ஆகமம்
தானி தானியேல்
திவெ திருவெளிப்பாடு
திப திருத்தூதர் பணி
திபா திருப்பாடல்கள்
தீத் தீத்துவுக்கு எழுதிய திருமுகம்
1திமொ திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்
2 திமொ திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
1தெச தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்
2 தெச தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
தொநூ தொடக்க நூல்
தோபி தோபித்து
நீமொ நீதிமொழுpகள்
பாரூயஅp; பாரூயஅp;க்கு ஆகமம்
பிலி பிலிப்பியருக்கு எபுதிய திருமுகம்
1 பேது பேதுரு எழுதிய முதல் திருமுகம்
2 பேது பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்
2 மக் மக்கபேயர் இரண்டாம் நூல்
மத் மத்தேயு எழுதிய நற்செய்தி
மலா மலாக்கி
மாற் மாற்கு எழுதிய நற்செய்தி
மீக் மீக்கா
யாக் யாக்கோபு எழுதிய திருமுகம்
யூதா யூதா எழுதிய திருமுகம்
யோவா யோவான் எழுதிய நற்செய்தி
1யோவா யோவான் எழுதிய முதல் திருமுகம்
3 யோவா யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்
லூக் லூக்காஸ் எழுதிய நற்செய்தி
விப விடுதலைப் பயணம்

 

(ஐஐ) சங்கம் வழங்கிய 16 ஏடுகள்

சுருக்கக்குறியீடு
ஏட்டின் உட்டிபாருள்
இலத்தீன் சுருக்கக் குறியீடும் விரிவும்

சுருக்கக்குறியீடு ஏட்டின் உட்டிபாருள் இலத்தீன் சுருக்கக் குறியீடும் விரிவும்
1 திவ திருவழிபாடு SC-Sacrosanctum Cencilium
2 சக சமூகத் தொடர்பு கருவிகள் IM-Inter Mirifica
3 தி திருச்சபை LG-Lumen Gentium
4 ககீ கத்தோலிக்கக் கீழைச் சபைகள் OE-Orientalium Ecclesiarum
5 கிஒ கிறிஸ்தவ ஒன்றிப்பு UR.Unitatis Redintegratio
6 ஆப திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி CD-Christus Dominus
7 துவா தழுவியமைத்துத் துறவற வாழ்வைப்புதுப்பித்தல் PC-Perfectate Caritatis
8 திப திருப்பணிப் பயிற்ச  OT-Optatam Totius
9 கிக கிறிஸ்தவக் கல்வி GE-Gravissimum Educations
10 கிச கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு NA-Nostra Aetate
11. இவெ இறைவெளிப்பாடு DV-Dei Verbum
12 பொதி பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி A.Apostolicam Actuositatem
13 சசு சமயச் சுதந்திரம் DH-Dignitatis Humane
14 திந திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பணி AG-Ad Gentes Divinitus
15 திவா திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும் PO-Presbyterorum Ordinis
16 இத இன்றைய உலகில் திருச்சபை GS-Gaudium et Spes

(ஐஐஐ) மற்றவை
அ. அமர்வு (Session)
அ.இ.ப அனைத்து நாட்டு இறையியலார் பணிக்குழு International Theological Commission
அ.கோ.வி அருள்பணிக் கோட்பாட்டு விளக்கம் Pastrol Constitution
அந் அந்தியோக்கியா சங்கம், ஆண்டு 341 Council of Antioch
அ.பே அருளடையாளங்கள் திருப்பேராயம் Sacred Congregation for the Discipline of the Sacraments
அர் அர்மேனியரின் சங்கம், ஆண்டு 1911 Council of the Armenians
அர்.சி அர்மேனியரின் சிசன் சங்கம், ஆண்டு 1342 Council of Sis of the Armenians
அர்.தூ அர்மேனியரின் தூயினன் சங்கம், ஆண்டு 719 Council of Duin of the Armenians
ஆ. ஓ ஆணை ஓலை Bull
ஆ.கு.பே ஆலோசனைக் குழுத் திருப்பேராயம் Sacred Consistorial Congregation
ஆ.பே ஆயர் திருப்பேராயம் Sacred Congregation for Bishops
ஆர ஆரஞ்ச் சங்கம், ஆண்டு 529 Council of Orange II
இயல் Chapter
இ.ச.எ.நூ இலத்தீன் சபை எழுத்தாளர் நூற்றொகை, CSEL – Corpus Scriptorum Ecclesiasticorum Latinorum, Vienna 1866 ff.)
இ.த. இலத்தீன் தந்தையர், PL – Patrologiae cursus completus… series latina ed. J.P.Migne Paris. 1844-1864
இ.தொ. இறையியல் தொகுப்பு Summa Theoligiae
இல இரண்டாம் இலயன்ஸ் பொதுச் சங்கம் ஆண்டு 1274 Council of Lyons II
இலா இலாவோதிசியா சங்கம், ஆண்டு 347.381 Council of Laodicea
இலாக் அண்மைக் காலப் பொதுச்சங்கங்களின்  Actorum et Decretorum Ss. Conciliorum
நடவடிக்கைகளும் விதித்தொகுப்புகளும் இலாக recentiorum Collectio Lacensis Freiburg i.Br.1870 ff.)

நகர நூற்றொகை
இலாத் இலாத்தரன் சங்கம் ஆண்டு 649 Lateran Council
இலாத் 4 4ஆம் இலாத்தாரன் பொதுச்சங்கம், ஆண்டு 1215 Laternan Council IV
உ.ஆ.ச.நூ உரோமை ஆயர் சடங்கு நூல் Pontificale Romanum
உ.தி.தொ உரோமை ஆணை ஓலைகள் தொகுப்பு Magunum Bullarium romanum
உ.தி.நூ உரோமைத் திருப்பலி நூல் Roman Missal
உருத் உருத்தேனியர்களின் சங்கம் ஆண்டு 1891 Council of The Ruthenians
உருமே உருமேனியரின் சங்கம் ஆண்டு 431 Council of the Rumenians
எ.டு எடுத்துக்காட்டு V-g
எபேசு எபேசுப் பொதுச் சங்கம், ஆண்டு 431 Council of Ephesus
ஒஸ்.ரொ ஒஸ்ஸெர்வாத்தொரே ரொமா னோ a a