Let us Pray for the Beatification of Martyrs of Mannar. கிறிஸ்துவுக்காக தம் இன்னுயிர் ஈந்த நம் இறை விசுவாசிகள் மறைசாட்சிகள் என்னும் பேறு பெறச் செபிப்போம்.
The Official Webpage of the Diocese of Mannar மன்னார் மறைமாவட்டத்தின் இணையதளம்.

மடுமாதா சிறிய குருமட விழா

மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்களை உருவாக்கும் படிமுறையின் நாற்று மேடையாகத் திகழும், மடுமாதா சிறிய குருமட விழா இன்று (13.10.2018) சனிக்கிழமை மகிழ்ச்சிப் பிரவாகத்தோடு நடைபெற்றது. மேலும் அறிய மடுமாதா சிறிய குருமட விழா

திருச்செபமாலை

இன்று நாம் செபிக்கும் திருச்செபமாலையின் ஒழுங்கு வடிவம் 1214ம் ஆண்டில் திருச்சபைக்கு கிடைத்த ஒரு உயரிய சொத்தாகும். இவ் வடிவம் தூய டோமினிக் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டதாகும். தூய டோமினிக் இதனை தூய கன்னிமரியாளிடமிரு ந்து பெற்றுக் கொண்டார். 12ம் 13ம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலே, துல்லூஸ் என்னும் இடத்திற்கு அருகாமையில் மேலும் அறிய திருச்செபமாலை

இத்தாலி பலெர்மோவில் மன்னார் ஆயர்…

இத்தாலி பலெர்மோ தமிழர் ஆன்மீகப்பணியகத்தின் சன் நிக்கொலா ஆலயத்தில்  30.09.2018 அன்று 35 இளையோருக்கு மன்னார் ஆயர்  மேதகு இம்மனுவேல் பெர்னாந்துவினால்   உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் வழங்கப்பட்டது. மேலும் அறிய இத்தாலி பலெர்மோவில் மன்னார் ஆயர்…

செபமாலை அன்னையின் திருவிழா

மருதமடுத் திருத்தாயாரின் வதிவிடமான மடுத்திருப்பதி செபமாலை அன்னைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு இடமாகும். இத் திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் முதல் சனிக்கிழமை செபமாலை அன்னையின் திருவிழா கொண்டாடப்படுகின்றது. மேலும் அறிய செபமாலை அன்னையின் திருவிழா

திருவிழாவிற்கான மாலைப் புகழ் ஆராதனை

மருதமடுத் திருத்தலத்தில் நாளை (06.10.2018) சனிக்கிழமை நடைபெறவுள்ள செபமாலை அன்னை திருவிழாவிற்கான மாலைப் புகழ் ஆராதனை இன்று (05.10.2018) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மேலும் அறிய திருவிழாவிற்கான மாலைப் புகழ் ஆராதனை

தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

மருதமடுத் திருத் தாயாரின் திருத்தலத்தில் இன்று 05.10.2018 வெள்ளிக்கிழமை மாலை திருப்பயணிகளின் ஆன்மிகத் தேவையை நிறைவு செய்யம் பொருட்டு இலங்கை செலான் வங்கியின் நிதியுதவியுடனும், மடுத்திருத்தல பங்களிப்புடனும் தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. மேலும் அறிய தூய ஜோசேவ்வாஸ் தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

அரச கிறிஸ்து பிறப்பு விழா கலை நிகழ்வுகள்

இலங்கை அரசின் கிறிஸ்தவ சமய பணிகள் திணைக்களத்தின் ஊடாக இலங்கை அரசு வருடந்தோறும் மாவட்டங்களில் கிறிஸ்து பிறப்புவிழாவை நினைவுகூர்ந்து நடாத்தி வரும் அரச கிறிஸ்து பிறப்பு விழா கலை நிகழ்வுகள் இவ்வாண்டு மன்னார் மறைமாவட்டத்தில் மார்கழி மாதம் 16ந் திகதி மன்னார் நகர சபையின் விளையாட்டுத் திடலில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கு இலங்கை சனநாயகக் சோசலிசக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு மைத்திரிபால சேனாநாயக்க வருகை தரவுள்ளார். மேலும் அறிய அரச கிறிஸ்து பிறப்பு விழா கலை நிகழ்வுகள்

மறைவாழ்வுக் கல்வி தேர்வு,

இலங்கை தேசிய கல்வி, மறைக்கல்வி, திருவிவிலிய அருட்பணி மையம், மறைவாழ்வுக் கல்விப் பணியாளருக்கென வருடந்தோறும் நாடு தழுவிய ரீதியில் நடாத்தும் மறைவாழ்வுக் கல்வி முதல் தேர்வு, மேலும் அறிய மறைவாழ்வுக் கல்வி தேர்வு,

குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு

மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும், தற்போது அமெரிக்கா நியூயோர்க் மறைமாவட்டத்தில் பணி புரிபவருமான அருட்பணி ஆலோசியஸ் பாக்கியநாதர் அடிகள் தனது குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு நிறைவினை நேற்று 22.09.2018 மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் கொண்டாடினார். மேலும் அறிய குருத்துவ அர்ப்பணத்தின் 40வது ஆண்டு